நம்மில் நிறையமனிதர்கள் வாய்ப்பந்தல் போடுவதில் மிகவும் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால்எவருக்காவது அவசியமான உதவி தேவையென்றால் மௌனமாக நழுவிவிடுவார்கள். அவர்களை குற்றம் கூறுவதில் அர்த்தமில்லை. அவர்கள் திறமைசாலிகள், சமயசந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள், மனோதைர்யத்தை நழுவ விடாமல் கவனமாக இருப்பார்கள். ஆனால் எதையும் சாதித்துக்காண்பித்து விட வேண்டும் என நினைப்பவர்கள் சாதிப்பதிலேயே குறியாக இருந்து தான் நினைப்பதை சாதித்துக்காட்டியும் விடுவார்கள். இம்மாதிரி மனோபலம் உள்ளவர்களை நாமும் சந்தித்தோமானால் நமக்குள்ளும் ஒரு உத்வேகம் உந்தித்தள்ளிக்கொண்டு வந்தேதீரும் என்பது நிச்சயமே.
அந்தக்காலத்தில் கப்பலோட்டிய தமிழருக்கும், சுப்ரமணிய பாரதிக்கும் எவர் உத்வேகமளித்து நினைத்ததை சாதிக்க யார்உதவினார்கள்? அவரவர் எண்ணங்களும் திடமான மனோவேகமும் அவர்களுக்குள்ளிருந்துதான் வரவேண்டும். நம் எண்ணங்களில் எந்த தவறான நோக்கமும் இல்லாதிருக்கவேண்டும். இப்படியாக தனக்குள்ளேயிருக்கும் ஆத்மபலத்தை உபயோகித்துக்கொண்டு முன்னேறும் வாய்ப்புகள் கிடைக்கும் நேரங்களில் வந்த வாய்ப்பை நழுவ விடாமல் நாம் நினைப்பதையும் முடித்துக்காட்டிவிடவேண்டும்.
மகாத்மாகாந்தி எதை பலமாக நினைத்துக்கொண்டு ஆங்கில ஆட்சியை உலுக்கினார்? ஆங்கிலேயர்கள் மகாத்மா காந்தியை அரைநிர்வாண பக்கிரி என்று அவரை பரிகசித்தநேரம் அவர் அவமானத்தினால் கூனி குறுகி மறுகவில்லை. என் தேசவாசிகள் அரச நிர்வாணமாக நிற்கும் நேரத்தில் எனக்கு மட்டும் என்ன என பதில் அளித்தார் . இந்தியாவில் வசிப்போர் , இன்றைக்கு நினைத்தமாத்திரத்தில் உலகின் எந்த மூலை முடுக்கிலுள்ளோருடமும் பேசிவிட முடியும்,
அவர்கள் வளர்ந்த காலத்தில் கனவில் கூட நினைக்க முடியாது, இந்தியாவின் எந்த பாகத்திலும் பேசமுடியும் என்பது. இன்றைக்கு நினைத்தவுடன் உலகின் எல்லாமூலை முடுக்குகளிலும் பேச முடிகிறது, என்பது உலகமே அறிந்துகொண்ட உண்மை. வசதிகள் பெருகப்பெருக மனிதர்களுக்கு இன்னும் வேண்டுமென்று நினைக்கவைக்கிறது. மனிதமனம் எதைக்கண்டாலும் தாவி பிடித்துக்கொள்ளவே முயற்ச்சி செய்கிறது.இதுதான் வளர்ச்சிக்குள்ள உத்வேகம்.
.
Leave A Comment