கவலையற்ற வாழ்வே மகிழ்வான வாழ்வு. அதிலும் எவரையும் அண்டியிருந்து , சதா உதவிகளை தொண, தொணவென்று கேட்டு அலுத்துப்போகுமளவிற்கு , பிறரின் உதவியை எதிர்பார்த்துஏமாறாமல், வாழும் யோக்யதை கிடைக்க வேண்டும். அதுதான் உண்மையான வாழ்வு. மனித வாழ்க்கையில் இந்தமாதிரி ஒரு சுதந்திரமானதொரு வாழ்க்கை கிடைத்து விட்டால் பூர்வஜன்மத்தில் செய்திருந்த கர்மங்களினால்தான் எனக்கூடகூறலாம். யாவருக்கும் கிடைக்காது, சுதந்திரமான வாழ்க்கை. சுதந்திரமான வாழ்க்கை என்றால், எவரையும் அண்டாமல்வாழ்வது என நினைக்கக்கூடாது. நமக்காக மனிதர்கள் இருக்கவேண்டும், ஆனால் நம்மை அதிகாரம் செய்து ஆட்டிப்படைத்து, நம்மை அடிமை போல நடத்துபவர்களாகவும் இருக்கக்கூடாது
அன்பிற்காக உதவிகளை செய்யமுடியும், ஆனால் வலுக்கட்டாயமாக எவரையும் எதையுமே செய்ய வைக்கக்கூடாது. எந்த வேலையாக இருந்தாலும் காலாகாலத்தில் நடத்திவைக்கக்கூடிய திறமை உள்ளவர்களாகவும் வாழ்வதுதான் நம் லட்சியத்தின் நோக்கம். உண்மையான அன்பும் , ஆதரவும் கொண்டவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை, செய்து விடலாம். ஆனால் எதையும் அலட்சியமாக கருதி வாழ்பவர்களுடன் வாழ்வதே கடினமானது. நம்மிடமிருந்து உதவிகளையும் பெற்றுக்கொண்டு, இனிமேல் தன்னால் சமாளித்து விட முடியும் என கருதும் நேரத்தில் நம்மைஓரங்கட்டி ஒதுக்குவதை நினைத்தால் கோபம் கொந்தளித்துக்கொண்டு வருவது இயற்கையே..
.ஆனால் கோபத்தினால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. பிறருக்கு புரிய வைப்பது என்பது அவ்வளவு எளிதான விசயமில்லை. ஆகவே நிதானமாக யோசித்து செய்ய வேண்டிய வேலைகளை செய்தே முடிக்கவேண்டும். கோபமுள்ள இடத்தில் குணமிருக்கும் என்று ஒரு பழமொழி உள்ளது.அது உண்மைதானா என்பதை அதைபுரிந்து கொண்டவர்கள்தான் கூறமுடியும்.
Leave A Comment