கொரோனா ஒரு தொற்றுவியாதி உடனுக்குடன் பரவக்கூடியது . எல்லா மனிதர்களுடன் பழகுவதற்கு , மிகவும் யோசித்து பழகவேண்டும், எப்பேர்ப்பட்டபலசாலியாக இருந்தாலும், கொரோனா பிடித்துக்கொண்டுவிட்டால் உயிருக்கு ஆபத்துத்தான் என பயப்படவேண்டியுள்ளதாயிற்று. நம்நாடு எத்தனையோ கொடிய வியாதிகளை கண்டிருந்தாலும் கொரோனாவிற்கு முக்யத்துவம் கொடுத்தாற் போல் மற்றவைகளுக்கு கொடுக்கவில்லை, போன்றதொறு தோற்றத்தை அளித்து பயமுறுத்தி வருகின்றது. கொரோனா பாதிப்பதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்றதொறு எண்ணத்தையும் மனித மனதில் பதிய வைத்து விட்டது.
ஆனாலும் ஒரு சில தைர்யசாலிகள் கவலையற்று கலக்கமில்லாமல் கொரோனாவைப்பற்றி கேட்டறியாத காரணத்தால், தைர்யமாக பேசுவார்கள், ஆர்ப்பாட்டமாக. கொரோனா என்பது ஒரு பேய்வியாதி , கண்ணுக்கு தென்படாமல் நம்மை அழித்துவிடுவது போல் ஓர் உணர்வை ஏற்படுத்தி பயமுறுத்தியும் விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் அதன் பிடியில் தான் மாட்டிக்கொள்ளாமல் பிழைத்தது தன்னால் மட்டுமே முடிந்தது போல் பேசி சிரித்து கொம்மாளம் போடுவார்கள். இப்படியாக ஊர், ஊராக சுற்றிவரும் கொரோனாவை தடுத்தி நிறுத்தி கண்ட்ரோல் செய்தாகிவிட்டது.
Leave A Comment