எங்கள் குடும்பத்தின் கூட்டம் மிகவும் பெரியது. கிராமவாசிகளாக இருந்த  போதிலும் அவர்களுக்கு பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்ற முறை தெரிந்து வளர்த்தார்கள். சில குடும்பங்களில் பக்கத்திலுள்ள சின்ன டவுனுக்கு சென்று வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கி பெரியவர்களை வைத்துக்கொண்டு பிள்ளைகளை படிக்கவைப்பார்கள். மேற்கொண்டு படிக்கவேண்டுமானாலும் ஹாஸ்டலில் சேர்த்தும் படிக்க வைப்பார்கள்.  இப்போது நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த கால மனித மனங்களும் மாறி விட்டன.பிள்ளைகள் பெற்றோரை குற்றம் சாட்ட தயங்குவதேயில்லை.

கோடைகால லீவில், மற்றும் வீட்டில் உறவினர் கல்யாணம் நடந்தாலும், எல்லோரும்  கிராமத்தில் ஒன்று சேர்வோம். கவலையே இல்லாமல் லூட்டி அடிப்போம். அவரவர்கள் கிளம்பும் டயம் வந்துவிட்டதும் அவரவர் தங்கள் மூட்டையை தூக்கிக்கொண்டு கிளம்பியும் விடுவோம்.  ஆறு, ஏழு வயதிலிருந்தே அதுதான் பழக்கமாக இருந்தபடியால் மனகஷ்டத்தில் உழன்றதேயில்லை. இன்றைய நிலைமையை அலசி பார்க்கும்போது பிள்ளகளை படிக்கவைக்க பெற்றோர்கள்அவர்களை சுற்றிவந்து கும்பிடு போடுவது போல் நடந்து வருகிறார்கள்.

இப்போது பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர் செய்யும் கூத்துக்களை பார்க்கும் சமயம் அவரவர்கள், தன் பிள்ளைகளை, மக்கள் ஆண்டவனை திருப்தி செய்ய ஆராதனை செய்வது போல செய்வது போலவே செய்கிறார்கள் .

இன்றைய பெண்மணிக்கு தன் கணவனுக்கு பிடிக்குமா, இல்லையா என்பதெல்லாம்கவலையில்லை. தன்பிள்ளைக்கு பிடிக்காது என்றால் அது ஒரு பெரிய பிரச்சனைக்கு உரியதாக எடுத்துக்கொண்டு செயல்பட நினைக்கிறார்கள் .

உண்மை என்னவென்றால் இன்றைய  பெற்றோர்கள் பிள்ளைகளை பார்த்து பயப்படுகிறார்கள், போன்ற நிலைமை.  இப்படி செய்தால் என் பெண் விரும்பமாட்டாள், என் பிள்ளைக்கு சுத்தமாக ஒத்து வராது என்றெல்லாம் பேசுவதைக்கேட்டால், மனிதகுணாதிசயங்கள் எப்படி மாறி விட்டது என்று நினைக்க வைக்கிறது. இந்தமாதிரியான சூழ்நிலைகளில் நம் மனநிலை ஒரே ரீதியில் இருக்கவேண்டியதும் அவசியம் நினைக்கும்படியாக இருக்கிறது.

பெற்றோர் செலவிட்டு படிப்பதற்கே  பிள்ளைகளுக்கு இந்த அகங்காரத்தை பெற்றோர்களே மனதில் உருவாக்கி  விடுவதைப்போல்தான் உள்ளது. இதே படிப்பை தன்னைத்தானே படித்து கிழித்திருந்தால், பெற்றோரின் கதி என்னவாகும் எனநினைத்துப்பார்த்தால் பெற்றோர்கள் கதி தர்ம சங்கடமான நிலையில்தான் தெரிகிறது.