இந்த உலகில் வாழ எதற்குமே ஆதாரம் வேண்டும். ஏனெனில் சாட்சி இல்லாத கேஸ் ஜெயிக்காது. உண்மையான அன்பிற்கும், பாசத்திற்கும் மதிப்பு கிடையாது. மனித மனத்திற்கு எதை அடைந்தாலும் மன திருப்தி அடைவதில்லை. நான் யார் என்பதற்கு ஆதாரம் தேவையே. அது பேப்பரில் இருந்தேயாக வேண்டும். எதை அடைய முடியவில்லையோ மனம் அதையே தேடுகிறது. மனித வாழ்க்கையில் மன சந்துஷ்டி மிகவும் அவசியமே. சந்துஷ்டி என்பது அவரவர் மனதில் தானாகவே வந்தடைய வேண்டிய ஒன்று. நம்மால் உணரக்கூடிய எதையுமே தேடிக்கொண்டு போக அவசியமிருக்காது. தானாக வந்தாலும் வரும்,வராமலே போனாலும் போய்விடலாம்.. அன்பை மட்டும் வைத்துக்கொண்டு எதையும் சாதிக்கவே முடியாது. அவஸ்தைதான் அதிகரிக்கும்.
அன்பாக இருக்கிறோம் என்றாலும் ஆபத்து . நம்மை மனக்குமைச்சலில் போடுவதற்கென்றே நம் உறவினர்களோ, சிநேகிதர்களோ மனதை கலக்கி விடுவார்கள். அன்பை அடிப்படை ஆதாரமாக தேர்ந்தெடுத்து, எது நம்மால் முடியாதோ அதை கேட்டு குழப்புவார்கள். நம்மை குழப்பும் மனிதர்கள் எவராக இருந்தால் நல்லது என்று யோசித்தால் விடையே கிடைக்காது. யார் வேண்டுமானாலும் கேள்விகள் கேட்பார்கள். பதில் கூற ரெடியாக இருக்கவேண்டும். மேலும் எதுவுமே கரெக்டாக நடந்து கொண்டிருந்தால் யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள். துளி ஏறுமாறாகி விட்டால் பச்சை பிள்ளை கூட நம்மை கேள்விகளால் துளைத்து விடுவார்கள். ஆகையால் எதற்காகவும் ஆதாரம் தேவைப்படுகிறது.
உலக வாழ்க்கையில் மனிதர்கள் தங்களால் இயன்ற செயலினால் எத்தனை நல்லவைகளை செய்தாலும், பிற மனிதர்களுக்கு பிடித்த அல்லது ஒத்துவருவது போல் உள்ளவைகளையே அங்கீகரிக்கிறார்கள். மற்றவைகளை ஒதுக்கி தள்ளிவிடுகிறார்கள். நாம் பிறருக்காக செய்து வருகிறோம் என்ற உணர்வு வந்தவுடன் நமக்குள்ளும் ஒரு கர்வம் தலைதூக்குகிறது. ஆகையால் நாம் அதி ஜாக்கிரதையாக, அலைபாயும் இந்த பாழும் மனதை அடக்கி, வளைத்துப்போட்டு, பிறருக்கு ஒத்து வருபவைகளையே நாம் செய்து முடிக்கவேண்டும், நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ,செய்ய முடியுமோ இல்லையோ, இதுதான் உலக நியதியாகவும் இருக்கிறது.
Leave A Comment