எத்தனையோ மனிதர்கள் உற்றார், உறவினர் என்று கொண்டாட ஆட்கள் இல்லாமலே தனக்கு யாருமே இல்லாமலிருப்பது  யாருடைய சாபமோ என நினைத்தோ, அல்லது யாருமில்லாதிருப்பதே மனதுக்கு நன்றாக உள்ளதோ, காலத்திற்கேற்ப,அவரவர்கள் வாழ்க்கையை  நடத்திக்கொண்டும் வருகிறார்கள். உறவினர் என்று கூறிக்கொள்ளக்கூட எவருமே இல்லாதவர்களையும் பார்க்கிறோம். அதற்காக எவரும்,எதையும் சாதிக்காமல் இருப்பதில்லை. எவருமே இல்லாத காரணத்தால் தைர்யம் அதிகமாகவே கை கொடுக்கிறது.

இந்த பொற்காலத்தில் யாரும்,யாரையுமே தட்டிக்கேட்பதற்கும்,குற்றம், குறைகள்கூறுவதற்கும் ஆட்களில்லாத காரணத்தினால் சாமான்ய மனிதர்களுக்குகூட தைர்யம் மேலோங்கி காணப்படுகிறது. தானே ராஜா,தானே மந்திரியுமாக இருப்பவர்கள்  எதற்கு பிரஜையை நம்பி வாழ வேண்டும்?   சிநேகங்களும் நமக்கு இக்கட்டான நிலையில் கைகொடுக்க தயங்கியே நிற்பார்கள். இன்றைய காலத்தில்அவரவர் கதியை அவரவர்தான் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்திவரவேண்டும்.  நாம் எதிர்பார்ப்பது போல் நமக்கு எதுவுமே அமைவதில்லை. அமைந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள மனது மறுக்கிறது. எது நன்மை பயக்கும் என்று புரியாது தவிக்கும் நிலைமையை எப்படி யாரிடம் வர்ணிக்கமுடியும்?

இந்த உலகில் மகிழ்ச்சியுடன் இருக்கிறதாக சொல்கிறவர்கள் மிக குறைவே. இருப்பதை வைத்துக்கொண்டு காலம் கடத்த பிடிக்கவில்லை. புதியவைகளுடன்  ஒத்துப்போக முடியவில்லை. நம்மை சுற்றிலும் குற்றங்களையே காண்கிறோம். நமக்குமே எதிலும் பிடிப்பு இல்லை என்று நினைக்கிறோம். உண்மையாக பார்த்தால் அப்படி இல்லவேயில்லை.

உதாரணத்திற்கு,அந்த காலத்தில் தீபாவளிக்கென்று புதிய துணிகள் வாங்குவோம்,மேற்கொண்டு இரண்டு தடவைகள் ஏதோ விசேஷங்களை முன்னிட்டு வாங்கினால் உண்டு. அண்ணன், தம்பி,அக்கா தங்கைகள் என்று இருப்பவர்கள், அவர்களுக்கு சின்னதாகி விட்டவைகளை மகிழ்ச்சியுடன் வாங்கி போட்டுக்கொள்வோம். நமக்கு புதியவைகள்தானே, என்ற எண்ணத்தில் மகிழ்வோம். இந்த நாட்களில் பெரியவர்கள் விருப்பு வெறுப்பை விட பிள்ளைகள் மனப்போக்கு எப்படி உள்ளது, என்பதையே நினைத்துப்பார்த்து செயல்படுகிறார்கள்.ஆசைக்கு ஒரு பெண், அத்யாவசத்திற்கு ஒரு பிள்ளை என்றிருப்பதால், பெற்றோர்களின் எண்ணங்களும் அவர்களையே சுற்றி, சுற்றி வட்டமிடுகின்றன. காலம் கன்னாபின்னாவென்று மாறி விட்டது.

இன்றைய துணிகளின்ஆயுள்  மனித ஆயுளைவிடஅதிககாலம்இருக்கிறது,கிழிவதேயில்லை.கலர்கொட்டுவதும் குறைவு.  இப்போதோ வீடு நிறைய துணிகள் சதா வருகின்றன, வாரிஇறைபடுகின்றன. அவைகளால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று தெரியாது, பிள்ளைகளுக்கு அடங்கிய     பெற்றோர்களாகி விட்டார்கள்.

ஆனால், எல்லாவற்றிலும் பிடிமானம் அதிகமாகி கொண்டே வருவது நமக்கே தெரியாமல் அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் யாரும் எவரையும் குறை காண முடியாது. உனக்கு நான் எனக்கு நீ என்பதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான். யாரும் எவருக்குமாக வாழ்வதுமில்லை, வீழ்வதுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படியும் மீறி யாரோ இரண்டொருவர் மகிழ்ச்சியை காண்பிக்கிறாற்போல் இருந்தால் பார்ப்பவர்களுக்கு நம்பும்படியாகவும் இல்லை.  உனக்கு நான்,எனக்கு நீ என்ற பாலிஸி பேச்சுக்காகத்தான் என்பதால் அதுவே சிறந்தது.