இந்த பரந்த உலகில் எத்தனையோ மனிதர்கள், உற்றார் , உறவினர்கள் இல்லாது தனியாக இடையூறுகளால் துன்புற்று, வாழ்ந்தபோதிலும்,அடாது மழை பெய்தாலும் ,விடாது குடை பிடிப்பேன், என்பது போல் நிமிர்ந்து  நிற்கிறார்கள். மேலும் தனக்கென யாருமேயில்லை என்னும் உண்மையை கிரஹித்துக்கொண்டு வாழ்கிறார்கள். தன்னை சமாளித்துக்கொண்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

அவர்கள், நண்பர்கள்கூட்டம், சகோதர, சகோதரிகளுடன், தனக்கென யார் இருக்கிறார்களோ, அவர்களுடன் தன்னை மிகவுமே நன்றாக வைத்துக்கொண்டு, மற்றவர்களிடம் அதி கவனமாகவும் பழக கற்றுக்கொண்டு விடுகிறார்கள். எல்லோரிடமும் மனோ தைர்யமும் வீர மனப்பான்மையும் உள்ளது. அந்தந்த சமயம் வரும் போதுதான் அவரவருக்குள்ளிருந்தும் உண்மையான சுபாவம் வெளிப்படும். ஒரு சில மனங்களின் உண்மை குணம் வெளிப்படையாக தெரியாமலே இருந்து வருகிறது.  தனக்கென யாருமேயில்லாது போனாலும் வாழ்க்கை பற்றில்லாமலும் இருப்பதில்லை. எந்த நாளிலும் யாரோ, எவரோ எதற்காகவோ வாழ்வதாகவும் புரிகிறது.  அதி கவனமாக தன்னுடன் யாரையாவது இணைத்துக்கொள்ளலாம், தேர்ந்தெடுத்தும் விடுவார்கள். இதுதான் இயற்கையின் நியதி. நோக்கமில்லாத  வாழ்க்கையில் யார் எப்போது குறுக்கே வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை,வாழ்க்கை எப்போது எப்படி நின்று போகும் என்பதை  எவரும் கணித்து கூற முடியாத ஒரு சிதம்பர ரகசியம்…