இன்றைய பெற்றோர்களுக்கு, தங்களுக்கு இருக்கும் ஒன்று, இரண்டு பிள்ளைகளையும் ஆல்ரவுண்டர் செய்து விட துடிக்கிறார்கள்.. அந்த பிள்ளைக்கு என்ன விருப்பம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வதை விட தங்கள் விருப்பங்களையே அவர்களுக்குள், திணிக்கப்பார்க்கிறார்கள். மேலும் விளையாட்டுக்களிலும் கூட பெற்றோருக்கு பிடித்தவைகளையே கற்றுக்கொள்ள கூறுகிறார்கள். Coachம் பெற்றோர்களின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து பிள்ளைகளின் ஆசையை முறித்து போட்டு விடுகிறார்கள். அப்போதுதானே coachகளின் சம்பாத்யம் அதிகரிக்கும்.
பிள்ளைகளுக்கு குரல் இல்லையெனினும் சரி, சுவாரஸ்யம் இல்லையென்றாலும் சரி பாட்டு கற்றுக்கொடுக்க தயங்குவதில்லை. இந்த காலத்து பிள்ளைகளுக்கு விளையாடவேண்டிய பருவத்தில் விளையாடவே டயமில்லாமல் ஆகிவிட்டது. மாறி, மாறி கிளாஸ் போகிறாற்போல் செய்து விடுவதால் பிள்ளைகளுக்கு புதிய மனிதர்களுடன் பேசவே தெரியாது. எல்லாவற்றிற்குமே கிளாஸ் போய்த்தான் தெரிந்து கொண்டு பழக்கமாகி விட்டது. இல்லாவிடில் அம்மாவை கேட்டு விட்டுத்தான் பதில் சொல்லமுடியும்.
இந்த கால பெற்றோர்கள் பிறக்கும் ஒருபிள்ளை, இரு பிள்ளைகளையும் பணத்தை கொட்டி, படிப்பை கொடுத்து பணத்தை திருப்பி ஈட்டுவது ஒன்றுதான் குறிக்கோள், என்பது திட்டவட்டமாக தெரியவருகிறது. சமூகத்தில் பழகுவதற்கும் அல்லது தானாக முன் வந்து ஒரு உருப்படியான வேலையை செய்ய தெரியாது திண்டாடுகிறார்கள்.
சில குடும்பங்களில், ஆண் பிள்ளைகளை தனியாக ஹாஸ்டல் அனுப்பி படிக்கவும், வேலைக்கும் போக வைப்பார்கள். இப்போது எல்லாவற்றிற்கும் சப்போர்ட் தேவையாக உள்ளது. என்னவெல்லாமோ சப்பைகட்டு பேச்சு பேசி ஒட்டுப்போட்டு அழுத்திவைக்கிறார்கள்.அவன்/அவள் அதிகமாக பேசமாட்டாள்/ன் என்று பொய் வேறு கூறுகிறார்கள். இந்நாட்களில் பெண்பிள்ளைகளின் துணிவு கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. ஏனென்றால் பெண்கள் பேசுவதில் வல்லவர்களாகவும், எடுத்துக்கொண்ட வேலையை முடிக்கும் துணிவுடன் இருக்கிறார்கள். பெண்கள் துணிந்து ஏதேனும் ஒரு வேலையை எடுத்துக்கொண்டால், முடித்து விட்டேதான் உட்காருகிறார்கள். ஆண்களுக்கு வண்டிகள் ஓட்டுவதற்கும், சிநேகித கும்பலுக்குள் கலந்து உரையாடவும், இதோ வந்துவிடுவேன் எனக்கூறி ஒரு மணிநேரத்தில் வருவதும்தான் பழக்கத்தில் வைத்துக்கொண்டு விடுகிறார்கள்.
வீட்டு வேலைகளை, புராணகாலம் மாதிரி பெண்மணிகளேதான் செய்யவேண்டிய நிர்பந்தம் கிடையாது. ஆண்களும் வேலைகளை எடுத்துப்போட்டுக்கொண்டு செய்து முடிக்கப்பார்க்கிறார்கள். இந்த பழக்கம் வரவேற்க வேண்டிய ஒன்று. எல்லா வேலைகளையும் ஆரம்பத்திலிருந்தே செய்து பழக்கமாகி விட்டபடியால் ஆண்களுக்கும் வித்யாசமாக தெரிவதில்லை. குடும்பங்கள் சுருங்கி வருவதால் இருக்கும் நபர்கள் வீட்டு வேலைகளில் பங்கேற்று செய்வதால் குடும்பதலைவிக்கு வேலைகளின் பாரம் குறையும்,மேலும் ஓரிரு பிள்ளைகளும்தான் இருக்கிறபடியால் வேலைகளின் அழுத்தம் தெரியாமல் இருக்கும். காலத்திற்கேற்றபடி எதையும் மாற்றிக்கொண்டு வாழ்ந்தால்தான் நன்மைகள் உண்டாகும். குடும்பங்களும் சுமுகமாக நடக்கும். யோசித்து செய்ய வேண்டிய விஷயமே..
Leave A Comment