இந்த பேச்சை யார்கூறினார்களோ,தெரியாது.எத்தனை பொய்யான வார்த்தை என்பதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்.அதுவும் வயது கூடிக்கொண்டு, தள்ளாமையில் தவித்துக்கொண்டிருக்கும்போது தன்கையே தனக்குதவி என்று கூறியவர்கள் எத்தனை வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள், இன்னல்களையே பார்த்ததே இல்லையா என சுட,சுட கேட்க மனது துடிக்கிறது.வயது ஏற,ஏற ஒவ்வொன்றுக்கும் பிறரை எதிர்பார்ப்பது அதிகமாகிக்கொண்டே போகிறது. பிறர் முகம் பார்த்துக்கொண்டு நிற்கும் சமயம், துக்கம் தொண்டையில் அடைக்கிறது, பேச்சு சிக்கிக்கொள்கிறது.எதிர்பார்த்து ,எதிர்பார்த்து ஏமாற்றமடைய வேண்டியுள்ளது.
டெலிபோனில் பேசினால் காதில் கேட்பதில்லை,மொபைல்போன் பற்றி எதுவும் புரிபடவில்லை.நேருக்கு நேர் பார்த்து பேசினால், முகஅசைவுகளை கண்டு பேச ஆரம்பித்தால்,90% தப்பாகவே பதில் பேசுகிறோம். தன்கையே தனக்குதவி என கூறியவர் யாராக இருக்கும்? யாரிடமாவது உதவிகேட்க வெறுப்பு தட்டினாலும், பல்லைக்காட்டி,இளித்துகொண்டு நிற்க வேண்டியுள்ளது. தனியாக வெளியில் செல்லமுடியாது,பணம்,காசு வரவு செலவு செய்ய முடியாது. பயமோ,பயம் எதைகண்டாலும்.
வீட்டில் தனியாக இருக்கமுடிவதில்லை,டிவி பார்க்க பிடிக்கவில்லை. பிள்ளைகளோ மண்டையை உடைத்துக்கொண்டு, வெடித்து விடுகிறாற்போல் கவலை அவர்களுக்கு.நடுவில்போய்பேச பிடிக்கவில்லை. வங்கிகளுக்கு தனியாக போனால் பயம். உத்திரவும் கிடைக்காது. தெருவில் நடக்க ஆரம்பித்தால் டிராபிக் மண்டையை பிளந்து விடுகிறது போல் தோன்றுகிறது. வாகனங்களின் இரைச்சல் தாங்கவே முடியவில்லை.
இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால், தன் கை தனக்கு உதவாது, நம் மனம் நம்க்கு தைர்யமே அளிக்காது, நம் உடல் நம் சொன்னபேச்சை கேட்காது,வயதானவர்களின் உண்மையான நிலைமை இதுதான். யாருடைய நல்வாக்கு தன்கையே தனக்குதவி என்பது?? எனக்குதெரிந்தவரை நம்முடைய ஒரு வெளி உறுப்புமே எதற்குமே உபயோகமில்லை வயதானபின்பு.வீட்டில் இருக்கும் உடைந்த நாற்காலிகள், மேஜைகள் போலத்தான் நம்மை போன்ற வயதானவர்கள்,ஆகி விடுகிறோம்.எது, எப்படி நடந்தாலும் பார்த்துக்கொண்டே உட்காந்திருக்கும் காலம் வந்து விட்டது..
Leave A Comment