நம் தோல்விக்கு நான்தான் காரணம் என நினைத்தோமானால் திருந்துவதற்கு சான்ஸ் உள்ளது. ஆனால் நாம் யாவருமே தோல்வியை கண்டு பயந்து விட்டோமானால், நம்மால் நம் தலையைக்கூட தானாகவே நகர்த்த கூட முடியாது. அவரவர் வாழ்க்கையில், தன் தோல்விக்கு காரணம் பிறரையே குற்றம் சாட்டுவதை பழக்கமாக கொண்டுள்ளார்கள் நிறைய பேர்வழிகள்.பெற்றோரை குறைகூறுபவர்கள், கிடைத்த வாய்ப்புக்களை தவறவிட்டு ஏமாற்றமடைந்தவர்கள்தான் அதிகமாக பிறரை குற்றம் சாட்டுவதாக நான் நினைக்கிறேன். கிடைத்த சமயங்களை நழுவ விட்டு குற்றம் கூறவேண்டும் சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்பது போல் நடிக்கிறார்கள்.நமக்கு அரிக்கும் சமயத்தில் நாம்தான், நம்க்கு வேண்டிய இடங்களில் சொறிந்து கொள்ளவேண்டும். யாராலுமே நம்க்கு வேண்டிய இடத்தில் நம்மை உட்கார்த்தி வைக்க எவராலும் முடியாது. எப்பேற்பட்ட புத்திசாலிகளுக்குமே கூட அடி சறுக்கும்.வாய்ப்புகளை தவற விட்டு, பரிதவிக்கும் பிற்காலத்தில் பிறரை குற்றம் கூறுவதே பழக்கமாக கொண்டுள்ளார்கள், சில மனிதர்கள்.அதற்காக யாவருமே அம்பானியாகவும், அப்துல்கலாமாகவும் ஆகி விட முடியாது. கிடைத்த சமயங்களை உபயோகித்துக்கொள்ளாமல், பிறரையே குற்றம் கூறுவதே தப்பு என்றுதான் நான் கருதுகிறேன்.
Leave A Comment