எம்மாதிரியான கடினமான சமயத்திற்கும், தான் அயர்ந்திட மாட்டோம் என மனிதர்கள் பேசுகிறார்கள்.ஆனால் பிறர் அல்லல் படும் சமயாசமயங்களில் எந்த உதவிகளையும் செய்ய முன் வரவும் மாட்டார்கள். மற்றபடி அவர்கள் பேச்சு வானத்தையே அளந்து, மடித்து ஒரு பைக்குள் போட்டு வைத்துவிட்டாற் போல் பேசுவார்கள்.வாய்ப்பந்தல் போட்டு எந்தகாரியத்தையும் முடிக்க முடியாதபடி செய்வார்கள்.ஆனால் அவர்கள் வாய்ப்பேச்சுக்கு கணக்கிராது. இந்த சுபாவம் உள்ளவர்களை அளந்து வைத்துக்கொண்டு அடக்கி ஆளவேண்டும். இம்மாதிரியான மனிதர்களை நம்பி முக்யமான வேலைகளில் நாம் இறங்கினால், அது அவர்கள் தவறில்லை, நாம்தான் ஒரு மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினோமானால் நம்க்கு என்ன கதி ஏற்படும்போது அதேதான் ஏற்படும்.ஆகையால் விஷயத்தை புத்திசாலிகளானவர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
நிறைய ஆட்கள் தாங்கள் பிறருக்காகவே எதையும் செய்யக்காத்திருப்பதாக கூறிக்கொண்டு நடிப்பார்கள், உண்மையில் பார்க்கப்போனால், இவர்கள்தான், எந்தவிதமான சமயங்களுக்கும், நத்தைகள் மாதிரி தங்கள் கூட்டைவிட்டு வெளியில் வராது அடைந்து கிடப்பார்கள். தள்ளி நின்று உபதேசங்கள் கூறுவதும், பிறரை வம்பிழுத்து வாக்குவாதங்களை கிளப்பி விடுவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களேதான் என்பதையும் காட்டிக்கொண்டு திரிவார்கள்.மற்றபடி எந்தவகையிலும் அவர்களை சேர்த்து வைத்துக்கொள்ள முடியாது.
Leave A Comment