பெண்பிள்ளைகளிடம் இருக்கும் ஒரே சொத்து அவர்களில்லாமல் அணுவும் அசையாது என்ற அபார நம்பிக்கையே. இன்றைக்கு பெண்மணிகள் நம் சுதந்திர இந்தியாவின் வித,விதமான கார்யாலயங்களில், பங்கேற்றுவேலை செய்து வருகிறார்கள்.அப்படியிருக்க ஆண்களாக பிற்ந்திருப்பவர்களுக்கு இந்த வன்மம் எதற்கு? அவர்களை எப்படி வேண்டுமானாலும் மடக்கி உட்காரவைத்துவிடலாம் என்ற நம்பிக்கை ஆண்களிடையே உள்ளது. ஆண்களிடம் உள்ள மனஅகோரசக்தி கிடையாதே தவிர,பெண்களிடம்,எல்லாவற்றையுமே மனம் திறந்து தட,தடவென்று கொட்டாமல், கொஞ்சம் உள்ளத்திலேயே அடக்கிவைத்துக்கொண்டு, சமயம் வருங்கால் மடை திறந்தாற் போல் கொட்ட ஆரம்பித்து விட்டால் எந்த அசுரனாலும் அடக்க முடியாது. புராண காலத்திலும் கண்ணகி, ஜான்ஸிராணி போன்ற வீராங்கனைகள் இருந்து வந்திருந்ததை போல்,இன்றும் கூட, சாதாரணமான வீடுகளிலும் சிலர் வாழ்ந்தும் வருகிறார்கள். பெண்களுக்கு ஆக்க சக்தியும் உண்டு, அதே சமயத்தில் அழிக்கும் மனோபாவம் பெற்றவர்களும் கூட. மனம் லயித்து பேசுவது போல் எதிராளிக்கு தோன்றினாலும், உண்மையை அறிய நேரம் எடுக்கும். ஆண்கள் எந்த ரூபமெடுத்து ஆடினாலும் சரிக்கு,சரி, பெண்கள் மோதுவதற்கு தயாராக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில், ஆண்கள் தங்கள் அதிகார தோரணையை காட்டி பெண்களை அடக்கி ஆள்வது கடினமே, ஆண்கள் தங்கள் புத்தியை உபயோகிக்கத்தெரியாமல், கீழ்த்தரமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்கள். பலவந்தத்தினால் யாருமே எந்தசக்தியையும் அடைய முடியாது, மனிதர்களுக்கு அந்த இனத்தின்மீதே வெறுப்பு வந்துவிடும். மனதில் குரோத மனப்பான்மையையும் வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். பலம் பொருந்தியவர்கள், தங்களுக்குள்ள சக்தியை சரியான விதங்களில் உபயோகித்தால்தான் மனித குலத்திற்கே நலம் ஏற்படும்.

எத்தனைகாலம் கீழ் லெவலில் பெண்களை ஆட்டிப்படைத்து ஆடு,மாடுகளைப்போல் ஓட்டினார்களோ, அதைவிட பலமடங்கு சக்தியை பெண்கள் இன்று காட்டுகிறார்கள். ஆனால் அழித்து குவித்து விடும் நோக்கம் கிடையாது. ஆண்கள் தங்கள் வீரத்தை காண்பிக்க வேறுவிதமாக தகாத வேலையில் ஈடுபட்டு ஆண்குலத்திற்கே, தேச நன்மைக்கே கேடு விளைவிக்க பார்க்கிறார்கள். ஆண்கள் மனதில் தாழ்மைத்தனம் புகுந்துவிட்டதின் காரணமோ என நினைக்க வைக்கிறது. நம் தேசத்தின் இளையதலைமுறை பெண்பிள்ளைகளை பலவந்தத்திலிருந்து எப்படி காப்பாற்றப்பட வேண்டும் என்பமதை பாரத சர்க்கார் யோசித்து செயல்படவேண்டும். ஆண்களின் இந்த கேவலமான பலஹீனத்தினால், அயல்நாட்டவர்களும் நம் நாட்டவர்களின் எந்த பதவிக்கும் மதிப்பு கொடுக்கமாட்டார்கள்.

ஒரு காலத்தில் பெண்களுக்கு பவர் இல்லாது தொய்ந்து போய் காணப்பட்டார்கள். இன்று சீறியெழுந்த சிம்மங்கள் போல் பாய்ந்து வருகிறார்கள். எல்லாம் காலத்தின் கோளாறுதான், ஆண்கள் தங்கள் தவறே எதுவும்கிடையாது, என்பதைப்போல் பேசுவார்கள். ஆண்களின் நடவடிக்கைகள் எல்லாமே சரியென்று கூற முடியாவிட்டாலும், அவர்களை தவற்றை எடுத்துக்கூற யாருமே, முன் வருவதும் கிடையாது. நம் தேசத்தில் பெண்களை தோற்கடித்து விடவேண்டும். அதுவேதான் முக்ய நோக்கமாக இருக்குமோ என்கிறமாதிரி காட்டுகிறார்கள். ஆண்பிள்ளை பிறந்தால்தான் வம்சவிருத்தி என்பதின் நோக்கம் இப்படி திரும்பி விட்டதோ? ஆண்கள், பெண்கள் இரு சாராருமே குடும்பத்திற்கும், நாட்டிற்கும் மிகவும் அவசியம்,என்பதை எப்போது உணருவோமோ தெரியாது. தேசத்தை எப்படி காப்பாற்ற வேண்டுமென்ற கவலையை விட நம் இளம் பெண்பிஞ்சுகளை கயவர்களிடமிருந்து எப்படி காப்பாற்ற படவேண்டுமென்பதில் கவனம் தேவை.வேலியே பயிரை மேய்வதை தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும். ஆண்வர்க்கமில்லாமல் பெண்வர்க்கம் கிடையாது, உண்டாக்குபவர்களே அழிக்கும் எண்ணத்தை அடைந்தால் நம்முடைய தேசத்தை காப்பாற்றப்போவது யார்?