விவாகத்தை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதே,விவாகமென்பது, விவாகத்திற்கு பின் இருமனம் ஒத்துக்கொண்ட ஒரு ஒப்பந்தம் என்பதை மறவாதே,
விவாகத்தை அந்தரத்தில் விட்டுவிட நினைக்காதே, ஆயுள் பர்யந்தம் அவஸ்தை படுவாய் என்பதை மறவாதே,
விவாகம் என்றாலே விட்டுக்கொடுத்து வாழ்வதுதான், விவாகம் என்பது, வேடிக்கை பார்த்து மறந்து விடப்போகும் டிவி சீரியல் அல்ல,
விவாகத்தால் விவேகம் வருவதில்லை, உண்மையில் விவாதமே வளர்கிறது,ஆனால் அதற்காக விவாகத்தை வெறுக்காதே,
விவாகத்தில் ஈடுபட்டால், அதை முறிக்க பார்க்காதே, விவாகத்தின் விவகாரத்தை நாற்சந்திக்கு கொண்டுவராதே,
விவாகத்தில் அக்னிக்கு சத்தியம் செய்தாய் என்பதை மறக்காதே,அந்த அக்னியே அழித்து விடும், அழவும் வைக்கும்,
விவாகத்தின் ஆழத்தை அளந்து கூற முடியாது, விவாகம் என்பது விளையாட்டல்ல, விவாகத்தை உணரத்தான்முடியும்,
விவாகத்தை வினோதமென்று நினைக்காதே,விபரமாக புரிந்து கொள்ள வாழ்ந்து பார்,
விவாகம் என்பது விட்டுக்கொடுப்பதும், விட்டுப்பிடிப்பதுமேதான் என்பதை மறவாதே, விவாகத்தின் ஆழம் ஆரம்பத்தில் தெரியாது,
விவாகத்தின் பாலம் மிகவும் சக்திவாய்ந்ததே, பரஸ்பர நம்பிக்கையில் கட்டிய கல்யாண கயிற்றின் பாலத்தை உடைக்கப்பார்க்காதே,
விவாகத்தில் வில்லங்கங்கள் வந்தாலும் கிடைத்ததை இழந்து விட்டு நிற்காதே, விவாகத்தில் நடுவர் வந்தால் வாழ்வே நாசம்தான்.
Leave A Comment