அந்த காலத்தில் வீடுகளில் தீபாவளி, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு மட்டுமே புதிய துணிகள் வாங்குவார்கள்.பிள்ளைகளுக்கும்,அதே பழக்கமாகிவிட்டபடியால் அவர்களும் அதிக டிமாண்டும்,செய்யாமல் இருந்தார்கள். இன்றைக்கோ வீடுகள் துணிமணிகளால் நிறைந்து கிடக்கின்றன. பள்ளிகளிலும் எதற்கெல்லாம் யூனிபார்ம் அத்யாவசியம் என புரியவில்லை. அதுவுமில்லாமல்,இன்றைய துணிகள் பத்து வருடங்கள் வரை கிழிவதும் இல்லை, கலர் மங்குவதும் இல்லை. பள்ளிகளுக்கே வாரத்தில் மூன்று யூனிபார்ம். அதற்கு மாட்சிங் சாக்ஸ்களும் உள்ளன. ஆனால் நல்லகாலம், பாதிக்கு மேல் பெண்பிள்ளைகள் முடியை கட் செய்து கொண்டுவிட்டார்கள். ரிப்பனுக்கு வேலையில்லை,ஆனால் பிளாஸ்டிக் பாண்ட் உண்டு, தலையில் மாட்டி வைத்துக்கொள்ள. வருடாவருடம் பைகள் வாங்கவேண்டும். அந்தக்காலத்தில் ஏதாவது மிஞ்சிக்கிடந்த கெட்டியான துணியில் பைகளை தைத்து தருவார்கள், அதைத்தான் சந்தோஷமாக எடுத்துக்கொண்டு ஓடுவோம் சிநேகிதர்களிடம்,காண்பிக்க. அதுவும் கிழிந்துபோய்விட்டால்,கிழிந்த இடத்தை ஒட்டுப்போட்டு, தைத்து வைத்துக்கொண்டு மிச்ச காலத்தை ஓட்டவேண்டும், ஒரு வருடத்திற்கு. யோகமிருந்தால் அடுத்த கிளாஸ் போகும்போது, யூனிபார்ம் சின்னதாகி விட்டால் புது யூனிபார்ம் கிடைக்க சான்ஸ் இருக்கும்.
அந்த நாளில் பிள்ளைகள் இறைந்து கிடைந்தார்கள். இந்த நாளில் துணிமணிகள் இறைபட்டு கிடக்கின்றன. இந்த நாளில் ஆயிரக்கணக்கான பணம் செலவழித்து கர்ப்பத்தை தடுத்து நிறுத்தி, பிள்ளைகள் பெற்றெடுப்பதால் பிறக்குமுன்பிலிருந்தே பெற்றோர் திகிலடித்து கொண்டு வாழ்கிறார்கள். பிள்ளைகள் ராஜ்யம்தான் இன்றைக்கு. BC யில் மொத்தமாக துணி ஒரே மாதிரி துணியை வாங்கி அளவுக்குத்தகுந்தாற் போல எல்லாருக்கும் தைத்து விடுவார்கள்,அலிபாபாவும், நாற்பது திருடர்களும் மாதிரி. பல நாட்கள் நம்மை பார்க்காமலிருந்து, நம்மைப்பார்ப்பவர்கள், இப்போது உன்னைத்தானே வாசலில் எங்கேயோ பார்த்ததாகவும் கூறுவார்கள். ஒரே குடும்ப யூனிபார்மில் நம்மை எங்கு பார்த்தார், ஏன் பார்த்தார், நாம் ஏன் அங்கு போனோமென்ற என்கொயரிக்கு நாம் ஆளாகவேண்டும், நமக்கு. வீட்டு போலீஸ் கெடுபிடியில்தான் வாழவும் வாழ்ந்தோம். இப்போதைக்கும் 25/30 வருடங்களுக்கும் நடுவில் பெரிய பள்ளத்தாக்கு வந்துவிட்டது என்றே கூறலாம்.
Leave A Comment