நம் நாட்டில் காதுகேட்கவில்லையென்பவர்களுக்கு ஷ்பெஷல் கவனிப்பு கிடைப்பதே கிடையாது. இந்தக்குறைக்கு மதிப்பு அத்தனை கிடையாது. ஏனெனில் இந்தக்குறை உறுப்புக்குள்ளேயே இருக்கிறபடியால், அவருக்கு காது கேட்காது என்று சொல்வார்களே தவிர ஸ்பெஷலாக கவனித்துப் பேசமாட்டார்கள், பேசுவது கிடையாது. ஆனால் வயதாகி உட்கார்ந்த பின்அவர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டம் தாங்கமுடியாது. காது கேட்காமலிருப்பதால் கண்ணால் பார்ப்பதுதான் அவர்கள் உலகம். வாய் அசைப்பதன் மூலம் தெரிந்து, புரிந்து கொள்வது அசாத்தியம்தான். காதுஅடங்கிவிட்ட படியால் கண்ணினால் பார்ப்பவர்களிடமும் புரிந்ததுதான் புரியும், புரிந்துகொள்ள முடியாத விபரங்களை அவர்களுக்கு யார் விவரிக்கமுடியும்?
காதடங்கிய பெரியவர்களுக்கு தெரியாதவர்களை பார்த்தால் பீதி ஏற்படுகிறது.தெரிந்த போக்கிரிகளை கண்டால் குலை நடுக்கம் அனுபவிக்கிறார்கள். இந்த பயம் ,பீதி உண்மையிலேயே அவர்களுக்குள் ஏற்படும் சுனாமி மாதிரி சீறிக்கொண்டு வருகிற பயம் , அவர்கள் மட்டுமே உணரக்கூடிய பீதி அது. ஊமை கனாக்கண்டால் எப்படிவிவரிக்க முடியும் ? மனித உடலில் எந்த ஒரு உறுப்பும் வேலை செய்ய மறுத்து விட்டதென்றால்,எத்தனை உபத்திரவங்களை அனுபவித்து வருபவர்களுக்குத்தான் தெரியும் அந்த உறுப்பின் மகிமை. அதுவும் நன்றாக இருந்து, வாழ்ந்துவிட்டு நடு வயதில் எந்த உறுப்பு ஒத்துழைக்காமல் இருக்கும் போது அதன் கொடுமை விவரிக்க முடியாது.
காதடங்கியவர்களுக்கு,எப்படி விவரித்தால் கேட்க முடியும்? அவரவர், அவரவர்களுக்காகவே வாழப் பிறந்திருக்கிறோம்.ஆம் இதுதான் நிஜமாகவே உண்மை. காதடங்கி உட்காருவதும் கொடுமைதான்.
மனதடங்கிஉட்கார்ந்தால் பணம், காசு வேண்டாம், பசிக்கும் போது எதைக்கண்டாலும் வாயில் போட்டுக்கொண்டு உள்ளே தள்ளுவார்கள். ஆனால் காதடங்கி விட்டால் பிறர் பேசிக்கொள்ளும்போது எதைப்பற்றிப்பேசுகிறார்கள் என்று புரியாதபடியால் தெளிந்த புத்தியுள்ளவர் கூட கலங்கி விடுகிறார்கள். இதுதான் காதடங்கியவர்களின கதி!!
Hearing Aids are there – is’nt it?