மார்ச் 5,2018 அன்று என்னுடைய பெரியப்பா பெண் திரிபுரசுந்தரி மறைந்துவிட்டார்கள். நான்கு சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்த அவருக்கு ஒரே ஒரு மனக்குறை இருந்தது. பிள்ளை பிறந்தும் தங்காத குறை. நான் சிறிய பெண்ணாக வளர்ந்துவரும்பொழுது, பெரியப்பா வீட்டில் ராமநாதபுரத்தில், அவர்களுடன் படிப்பதற்காக இருந்தேன்.பெரியப்பா ஹைவேஸ் என்ஜினியரிங் வேலை பார்த்தார்.
சுந்தரி நல்லதன்மையான பெண்மணி, ஆனால் தனக்குள்ளேயே இருப்பார். வீட்டு நிர்வாகத்தில் பொறுப்பாக ஈடுபட்டு செம்மையாக செய்து முடிப்பார்.1972/73 ல் எங்களுடன் சுந்தரியை தங்க வைத்துக்கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.என் பிள்ளைகளுக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அதிகமாக பேசமாட்டார். தனக்குள்தான் இருப்பார். சுந்தரி பெரியம்மா என்றால் என்பிள்ளைகளுக்கு அலாதி பிரியம் உண்டு. ஆனால் எங்களால் அவரை அடிக்கடி சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.
சமீபத்தில் ஒருநாள் அக்கா, போனில் பேசினார் என்னுடன், அப்போது சிறிய பெண்பிள்ளை மாதிரி உற்சாகத்துடன் என்னைக்கேட்டார், உனக்கு ஞாபகம் இருக்காடி, ராமநாதபுரத்தில் நீ உன் சிநேகிதி சுசீலாவீட்டில் ஒரு சின்னபிள்ளையுடன் விளையாடுவாயே, அது யாரென்று தெரியுமா உனக்கு? நான் எனக்குத்தெரியாது என்றவுடன், அடீ, அந்த குட்டிப்பிள்ளைதான் இன்றைய கமலஹாஸன் என்றதும் கூறியதும், அந்த ஆள் பெரிய ஆள் நம்க்கென்ன ஆச்சு அக்கா? என்றதும், அப்படி சொல்லாதேடி என்ன ஆனாலும் நீ இன்றைய ஒரு சூப்பர் ஸ்டாரை தூக்கி கொஞ்சியிருக்கிறாய். ஞாபகம் வைத்துக்கொண்டிரு என்றதும், யாருக்கு யார் அக்கா சம்பந்தம், நாம் ஒரு சொட்டுதண்ணீரை சமுத்திரத்தில் கலந்தாற்போல்தான் அக்கா,இந்த சமாசாரம் எனக்கூறி பேச்சை முடித்தேன். ஆனால் அன்று அக்கா பேசியது எனக்கு சின்னபிள்ளை லாலிபாப் கிடைத்தால் மகிழ்வது போல் பேசியது இந்த நிமிடம் போலிருக்கிறது.
அத்திம்பேர் ISROல் வேலை பார்த்தவர். சுந்தரி அக்காவின் இழப்பு, அவருக்குத்தான் பெரிய நஷ்டம். இந்த வயதான நாட்களை தனிமையில் வாழ கடினமாகவே இருக்கும்.சுந்தரி அக்காவின் சகோதர்ர்கள் அவரை தனிமையில் வாட விடமாட்டார்கள், என்றே நம்புகிறேன். உயிரிழப்பு என்பதே உலகில் கொடுமையானதுதான்…..
Leave A Comment