நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைதான் மிகவும் மட்டமானது என எவராவது நினைத்துப்பார்ப்பதை விட உண்மையை உணர்ந்தால்தான் வாழ்க்கை மலர ஆரம்பிக்கும். தன்னைவிட கடினமான சமயங்களை எதிர்கொள்பவர்களை கண்டால் அல்லது நாம் அவர்களைவிட பெரிய கஷ்டங்களை எதிர் கொள்ளவில்லை
என நினைக்கும்போதுதான் புரிய வரும்,தான் எத்தனை சுகவாசி என்பது. மனிதமனம் தன்னில் பார்த்து மனநிறைவு அடைவதே கிடையாது.
மனிதர்கள் தங்களை பிறருடன் ஒப்பிட்டுப்பார்த்து மட்டுமே மகிழ்வுடன் வாழப்பார்போம். தனக்கிருப்பதில் சந்துஷ்டியடைந்து, வாழ்ந்தோமானால் பிரச்னைகள் எழுவது குறைவாகவேயிருக்கும். எல்லாவற்றிற்கும் இன்னொருவருடனேயே ஒப்பிட்டு பார்த்தே வாழும் பழக்கம்தான் நம்மில் புதியதாக எதையும் செய்ய முடியாமல் தடுக்கிறது. இன்னொரு காரணம்,எதைப்பார்த்தாலும் தன்னுடையதாக்கிக்கொள்ளவும் மனம் விழைகிறது. உதாரணமாக பணம் எத்தனை வந்தாலும் போதவில்லை.வீடு வாங்கமுடியாமல் வாடகை வீட்டிலேயே 20,30வருடங்கள் வாழ்ந்துவிட்டபின் கூறுவார்கள், சிறியதாக ஒரு வீடு நம்முடையது எனகிடைத்துவிட்டாலே போதும் என்பார்கள்,வாழ்க்கையில் வீடு வாங்கலாமென்ற படியில் காலடி வைக்கும் சமயம்.
அழகான,கச்சிதமான சிறிய வீட்டை கனவு இல்லமாக நினைத்து பெருமயடைவார்கள்,கொஞ்சகாலத்திற்கு. அதன்பின்னர்,ஆரம்பமாகிவிடும், புலம்பல். என் புத்தியைதான் செருப்பால் அடிக்க வேண்டும், அப்போதே இரண்டு வீடாக வாங்கியிருக்கலாம், இரண்டையும் ஒன்று சேர்த்து பெரிய வீடாக்கியிருக்லாம். உன் பேச்சைகேட்டாலே என்னால் எதுவும் கான்க்ரீட்டாக எதுவுமே செய்ய முடியாது போய் விடுகிறது, என்றென்றெல்லாம் பிறர்மீது குற்றம் சுட்டிக்காட்டுவார்கள்.இதே மனிதன் முதலில் வீடு வாங்க போகும்போது சின்னதாக கச்சிதமாக உள்ளது, நமக்கு இதைவிட என்னவேண்டும்? பணம் கட்டுவதுகூட தெரியாமல் முடிந்து விடும், என்றெல்லாம் பேசியிருப்பார்.
மாடி வீடாக இருந்தால் இந்தபடிகள் ஏறி,ஏறி பிராணன் போகிறது என்றும், கீழ் வீடாக இருந்தால்,ஒரே இருட்டறையாக உள்ளது என்பார். வெளியில் வந்து போகும் இந்த பசங்கள் போடும் கூச்சல் மண்டை உடைகிறது, தாங்கவில்லை என்றும் அங்கலாய்ப்பார்.
இப்படி தனக்கென கிடைத்தவைகளை வைத்துக்கொண்டு திருப்தி அடையாதவர்களை வைத்துக்கொண்டு காலம் நடத்துவது மிகவும் கடினமே.
Leave A Comment