பட்டாம்பூச்சியை போல் ஓடிதிரிந்த எனக்கு களைப்பு ஏற்பட்டு உட்கார்ந்து விட்டேன்,
கனவுலகில் அலைய நேரமில்லாத எனக்கு, விரல் சொடுக்க கூட டயமில்லாமல்,
இருந்த நான் வெம்பி உட்கார்ந்துவிட்டேனா? யாருக்காக ஓடி களைத்தேன்,
எவருக்கு பயந்து வாழ்ந்து, உள்ளத்திலுள்ளதை கூட கூற, ஆளில்லாமல் தவித்தேனா,
வாழ்ந்தது,எதற்காக?, இந்தபக்கம் திரும்பினால் அம்மா கண்ணுக்கு தெரிகிறார், அப்பா வெகு
தூரம் போய் விட்டாரென்று அம்மா தேடுகிறார், போலும், சண்டையைப் தவிர்க்கவே,
எவரும் விரும்பினாலும், நடத்திக்காட்டுவது அத்தனை சுலபமில்லையே! புரிந்து கொண்டு
வாழ பார்த்தாலும் முடியவில்லை, புரியவைக்கப்பார்த்தாலும் முடியாது. ஒரு வாழ்க்கையை,
நடத்துவதும்,வாழ்ந்த வாழ்க்கையை பற்றிப்பேசக்கூட, இன்று பிடிக்காது ஆகிவிட்டது.
பட்டாம்பூச்சியின் கூட்டைத்தேடி பார்த்தேன், அழிந்து விட்டது என்றே நினைத்து களைத்து,
சளைத்து உட்கார்ந்துவிட்டேன். பரந்த இவ்வுலகில், உன்க்கொரு,எனக்கொரு சட்டமென்று
இல்லை. வந்தவர் போயாகவேண்டும், புதியநபருக்கு இடம் தேவை,வேட்டிபோய்,பாண்ட் வந்தது,
பாண்ட் போய்,அரை ட்ராயர் வந்தது. புடவை போய் சல்வார் கமீஸ், வந்தது,சல்வார்கமீஸ்போய்
ஜீன்ஸ் வந்துள்ளது. எல்லாமே குறைந்து வரும் காலத்தில் பிள்ளைகள் நிறைவையே பார்த்து
மகிழும் திறமையை பெற்றுள்ளார்கள், என்பது போற்ற தக்கதே…