இழப்பு என்பதில். பல வகைகள் உள்ளன. விலை உயர்ந்த சாமானை இழப்பது, பணமூட்டையை இழப்பதை விட கொடுமையானது, பிள்ளை காணாமல் போவது. ஒரு குடும்பத்தில் உறவினர்கள் வந்திருக்கும் சமயம் எல்லோருமாக கடைத்தெருவிற்கு சென்றிருந்தார்கள்.சுற்றி,சுற்றி கால் அசந்து போய் ஏதாவது கூல்ட்ரிங்க்ஸ் குடிப்பதற்காக நின்ற சமயம் எட்டுபேர் வீட்டை விட்டு கிளம்பியிருந்தபடியால் எட்டு டம்ளர் ஜூஸுக்கு ஆர்டர் கொடுத்தபின், யாவருக்கும் கொடுக்கும் சமயம், பார்த்போது, ஏழுபேர்களே இருந்திருக்கிறார்கள். ஜூஸைக்குடித்து முடித்துவிட்டு போலீஸில் புகார் எழுதிவிட்டு துக்கம் நிறைந்தமனதுடன் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார்கள். ஏழு வயதான சூட்டிகையான பெண்குட்டியை யாரோ கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். கடத்தியவர்கள் அதே ஊரிலேயே வைத்திருக்க மாட்டார்கள் என்றுதான் கூறுவார்கள். திருடர்கள் போலீஸை விட சாமர்த்தியம், படித்த மேதாவிகளை விட புத்திசாலிகள், என்பதை ஒத்துக்கொண்டு ஆகவேண்டும்.
அந்த பெண்ணின் இடது காலை முழங்கால்வரை வெட்டிவிட்டார்கள், வலது கையை மணிக்கட்டுவரை வெட்டி தானாகவே எங்கும் போகமுடியாது, எதையும் எழுதிக்காட்ட முடியாதபடி செய்துவிட்டார்களாம். ஒவ்வொரு ஊராக அழைத்துச்சென்று பிச்சைஎடுக்க பழக்கிவிட்டார்கள். காலையில் உட்கார்த்திவிட்டு சாயம் வந்து மாலையில் வந்து அழைத்துப்போவார்களாம். நடு,நடுவில் கண்காளிப்பாளர்களும் கவனித்துக்கொண்டிருப்பார்களாம், அந்த பெண்ணோ, பையனோ,எவரிடமும் பேசக்கூட தைர்யமே வரக்கூடாதென்று பயமுறுத்தி வைத்திருப்பார்களாம். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில், மார்க்கெட், ரயில்வேஸ்டேஷன் போன்ற இடங்களில் உட்கார்த்தி வைத்து விட்டு, புது,புதுஊர்களுக்கு அழைத்துப்போய்விடுவார்களாம். சில பிச்சைக்கார்ர்கள் பிள்ளைகளை நல்ல விலை கொடுத்து வாங்கியும் கொள்வார்களாம். இந்த பெண்ணை எங்கிருந்து கடத்தினார்களோ அதே இடத்திலிருந்து ஒருவன் வந்து வாங்கிசென்றிருந்திருக்கிறான். அதே மார்க்கெட்டில் அந்தப்பெண் தன் அம்மாவையும், அக்காவையும் எட்டு வருட இடைவெளிக்கு பின் பார்த்தபோது தான் யார் என்பதை வெளிப்படுத்திவிட்டாளாம்.ஆனால் கடத்திய கும்பலுக்கு தன்னை பெற்றோர் கண்டுபிடித்து விட்டதாக தெரிந்தால் தனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என நினைத்து மேலே பேச வேண்டாமென கூறி அவர்களை துரத்தியடிக்கும் சமயம் அவளை வாங்கிய கும்பலும் வந்து அந்த பெண்ணை அழைத்துப்போய்விட்டார்களாம். தன் பிள்ளை காணாமல்போனதை விட இந்த பிச்சைக்காரபிள்ளையை கண்ட துக்கம்தான் அதிகமாகியிருக்கும் பெற்றோர்களுக்கு என்பதில் சந்தேகமேயில்லை. மனித குலத்தில் பிறந்த நமக்கு புத்தி எத்தனை குரூர விதமாக வேலை செய்கிறது என்பதே நமக்கே தெரிவதில்லை. அந்த கொடுமையை கண்ட தாயார் சித்தபிரமை பிடித்து இறந்தாள். குடும்பமே அதிர்ந்து நின்றது. நம்மால் கடந்து போன காலத்தை மறக்க முடியாமல் தவிப்பதை யாரிடம் கூறுவது?
Leave A Comment