எந்த கஷ்டங்களையும் அனுபவித்தவர்களேதான் உணரமுடியும் என்பதேதான் உண்மையானது. யாராவது தங்களால் நினைத்து பார்க்க முடிகிறது என்றாலும் உண்மை நிலையை உணரவே முடியாதுதான். வாழ்க்கையில் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும், நம்முடைய பிரியத்திற்கும், நமக்கென்றே இருப்பவர்களை பங்கிட்டுக்கொள்ள நேர்ந்துவிட்டால், அந்த கொடுமையை எத்தனை விவரித்தாலும் , ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான உணர்வுகளேதான் ஏற்படும் என்பதில் சந்தேகமேயில்லை. அந்த கொடுமை அதிகமேதான். அன்னபூரணிக்கு தனக்கு கல்யாணம் நிச்சயமானதில் பூரித்து மகிழ்ந்தாள். பிக்கல், பிடுங்கல்கள் இல்லாத குடும்பம் கிடைத்ததில் பெற்றோருக்கும் பரமதிருப்தி. பையனும் நல்ல புகழ் பெற்ற கம்பெனியில் வேலை பார்க்கிறான். கை நிறைய சம்பளம். கல்யாணம் அமர்க்களமாக முடிந்து அன்னபூரணியும் , மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருந்த வீட்டில் மேள, தாளத்துடன் வலதுகாலை எடுத்து வைத்தாள். புது பெண்ணையும் , மாப்பிள்ளையையும் ஆர்த்தி எடுத்து அழைத்தவுடன், கல்யாணசடங்குகள் முடிந்து விட்டதாக நினைத்த அன்னபூரணிக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
கொஞ்ச நாட்கள் எங்களுடன் தங்கி நம்மவீட்டு பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டபின் அன்னபூர்ணி நகரத்திற்கு வருவாள் . அவளுக்கும் தன்வீட்டார்களுடன் தங்கியிருக்கும் சமயமும் கிடைக்கும் எனக்கூறி பிள்ளைவீட்டாரின் உறவினர்களில் ஒரு பெண்மணி, யார்இந்த விவாகத்தை நிச்சயித்துக்கொடுக்க காரணமாக இருந்தாளோ, அவள் அதிகாரமாக கூறியதும், அதை வேத வாக்காக எடுத்துக்கொண்ட பிள்ளை வீட்டாரையும் பற்றி யோசிக்க வைத்தது. ஆனாலும் உண்மையை அறியமுடியாத பெண் தரப்பு பெரியவர்களும் வேறு வழியில்லாது ஒத்துக்கொண்டு விட்டார்கள். ஆனால் அந்த திட்டத்தை அன்னபூர்ணாவினால் மனதார ஒத்துக்கொள்ளவே முடியாமல் மனம் ஒடிந்து போனாள். அன்னபூர்ணாவிடம் மாப்பிள்ளைஒரு வாரத்திற்குள் அவளுக்கும், தனக்கும் ஹனிமூன் சிம்லாவிற்கு கிளம்ப டிக்கட் வாங்கி விடப்போவதாக கூறியவன், அதையும் கான்சல் செய்துவிட்டதை கேட்டு, பிள்ளையின் மனமாற்றத்தின் காரணத்தை அறிந்து கொள்ளமுடியாமல் மனதுக்குள் கிலேசம் புகுந்து விட்டது.
இக்காலத்து பிள்ளைகள், தாங்களாகவே தேர்ந்தெடுத்த பெண்ணையோ, பிள்ளையையோ கல்யாணம் செய்து கொண்டு , அழகாக பிளான் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இவர்கள் மணவாழ்க்கையில், நடுவில் வந்து கலகம் செய்யும் பெண்மணியை பற்றி யோசித்து மண்டை குழம்பி விட்டது , அன்னபூர்ணாவின் மனதில் திகில் பிடித்துக்கொண்டுவிட்டது என்னவோ உண்மைதான். அதன் காரணத்தை அறிய முற்பட்ட சமயம், எந்த பெண்மணி இந்த கல்யாணத்திற்கு மூலகாரணமாக இருந்தாலோ, அவளே இம்மாதிரி சாகச பேச்சுக்கும், காரணமாக இருந்தபடியால்,பிள்ளைவீட்டாரும் , அவளுடைய பேச்சை தட்டமுடியாமல் திணறிவிட்டார்கள், எனக்கேள்விப்பட்டதும், சந்தேகம் வலுப்பட்டு விட்டது. பிள்ளை வீட்டுக்காரர்களும், பிள்ளைக்கு வீடு தேட ஆறுமாதங்கள் தேவைப்படும் என்று ஒத்துப்பாடியதும் ,பெண் வீட்டாருக்கு சந்தேகம் வலுத்துவிட்டது. பிள்ளை வீட்டாரும் மருமகன் ஏதோ மேல்படிப்பு படித்துகொண்டிருப்பதால் அவனுக்கு ஆறுமாதங்கள் தேவைப்படலாம், அழைத்துப்போக என கூறுகிறான், என கேட்டதும் பெண் குடும்பத்தினரும் வாயடைத்து நின்றனர். ஆனால் பையன், நீ மேற்கொண்டு படிக்கப்போவதாக அந்த மாமி கூறினார்களே என பெண்ணைக்கேட்டதும் நீ எந்த கோர்ஸில் சேர்ந்திருக்கிறாய் என அன்னபூர்ணாவிடம் கேட்டதும்,அவள் திகைத்து விட்டாள், அவனிடம் யார்கூறினார்கள் என கேட்டதும், தங்கள் கல்யாணத்தை நிச்சயித்த பெண்மணிதான் என கேட்டதும், அன்னபூரணிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதுவுமே படிப்பை பற்றி பேசாத சமயம் , இவர்கள் எதை வைத்துக்கொண்டு தன்னைபற்றி டிஸ்கஸ் செய்து முடிவெடுக்க முடியும் என நினைக்கத்தோன்றியது. அன்னபூரணியை தன்னிடம் ஆறுமாதங்கள் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துவதைபற்றி கற்றுக்கொடுத்து விடுவேன் என ஆறுதல் கூறுவதைப்போல கூறி விட்டாளாம். பெற்றவர்களும், மற்றவர்களும், செய்வதறியாது திகைத்து நின்றுவிட்டார்கள். பெண்ணைப்பெற்றவர்களுக்கு ஏதோ சூழ்ச்சி போலிருந்தாலும் மேற்கொண்டு, யாரிடமும் எதுவும்கேட்டறிய முடியாது வாயடைத்து போனார்கள்.
ஆனால் மாப்பிள்ளை அன்னபூரணியை தன்னுடனேயே அழைத்துக்கொண்டு போய்விட்டான். அதை ஒரு காரணமாக்கி தன் பேச்சை பெண் வீட்டார் மறுத்து மாப்பிள்ளையுடன் பெண்ணை அனுப்பியது தவறு என்று வாதாடி, வீம்பிற்காக சண்டை போட்டு உறவை முறித்துக்கொண்டு விட்டாளாம். சில மனிதர்கள், தங்களுடைய சாமர்த்தியத்தை வேறுவிதமாக உபயோகித்து, பிறர் வாழ்க்கையை கெடுக்க முயன்று வெற்றியும் அடைகிறார்கள். இன்னொருவர் குடும்பம் நாசமாவதில் அவர்களுக்கு எந்தவிதமான லாபமுமில்லை . ஆனால் ஒரு சிலர் தன்னுடைய குரூரமான மன திருப்திக்காக குடும்பங்களை ஒன்று சேர விடாமல் செய்து விடுகிறார்கள், என்பது உண்மையே !
Leave A Comment