எங்களுக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் சிறிய விசேஷமோ, பெரிய விசேஷமோ ஏதாவது ஒரு நகை காணாமல் போய்விடும். விசேஷத்திற்காக வந்தவர்களில் கண்ணால் காணாமல் யாரை குற்றம் கூறுவது? அநாவசியமாக யார்மீதும் குற்றம் குறை கூற முடியாதபடி தவித்து போவார்கள். குடும்பத்து உறவினர்கள் யாவருமே நல்ல வசதியுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாரை சொல்வது என நினைத்துக்கொண்டு , கொஞ்சகாலம் புலம்பி, தவித்து மறந்தும் விடுவார்கள். பல வருடங்கள் கடந்து விட்டன. இந்த தடவை அவர்கள் பேரனுக்கு சீமந்தம் நடந்தசமயம், பேரனின் மனைவி ஒரு ஜன்னலுக்கருகில் புடவை மாற்றிக்கொள்ளும் சமயத்தில், அதே ஜன்னல் வழியாக சிகப்பு வளைகளணிந்த ஒரு கை உள்ளே வந்து, உடனடியாக மின்னல் வேகத்தில் வெளியில் போனதையும் ஒருவர் பார்த்துவிட்டார். கை உள்ளே வந்த வேகத்தில் வெளியில் போய்விட்டதை கண்டவுடன் இவருக்கு சந்தேகமாகிவிட்டதாம். ஆனால் உடனடியாக சாப்பிடகூப்பிட்டவுடன் இவரும் போய்விட்டார். அதற்குள் யாவரும் சாப்பாட்டிற்காக சென்று கொண்டிருந்திருக்கிறார்கள்.
எல்லோரும் பேசி, சிரித்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு சல, சலப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆண்கள் கைகளை கழுவி விட்டு வெற்றிலை பாக்கு போடுமிடத்தில், பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள் , அந்த திருட்டைப்பற்றி. ஜன்னலிலிருந்து வெளிப்பட்ட சிகப்பு வளையல்கள் அணிந்த ஒரு கை மின்னல் வேகத்தில் உள்ளே வந்து வெளியில் போன கையை பார்த்த மனிதருக்கு இந்த செய்தியை சந்தேகம் தட்டி அவர் வெளியில் வந்து பெண்மணிகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து பந்தி விசாரணை செய்வது போல சிகப்பு வளையணிந்த கைகளை நோட்டம் விட்டு அடையாளம் கண்டு கொண்டு விட்டார். தன்னையும் நிதான படுத்திக்கொண்டு, பங்ஷன் நடத்தியவரிடம் கூறிவிட்டார்.
மேலும், யாரும் அந்த வீட்டை விட்டு வெளியில் போக அனுமதி தராமல், ஒவ்வொருவரும் தங்கள் பைகளை, கைப்பைகளை தலை கீழாக கொட்டவேண்டும், இல்லையேல் போலீஸை கூப்பிடபோவதாகவும் சொல்லி அனுமதி கேட்டு சொல்லியும் விட்டார். எவருமே கலங்கவில்லையாம். உடனுக்குடன் நிறைய பெண்மணிகள் தங்கள் பைகளை காலி செய்து காட்டிவிட்டு வெளியில் சென்றிருக்கிறார்கள். ஆனால் சிகப்பு வளையணிந்த பெண்மணிமட்டும் தனக்கு லஞ்ச் லேட்டாக சாப்பிட்டதால் பட, படப்பாக வருகிறது, டாக்டரை கூப்பிட்டால்தான் நல்லது எனக்கூறியவுடன், அதெல்லாம் இப்போது எதுவுமே செய்ய முடியாது , போலீஸாரை கூப்பிட்டு சோதனையை வேகமாக செய்து விட்டதும் டாக்டரை கூப்பிடலாமென கூறியதும், தவற்றை ஒத்துக்கொண்டு அழுது கொண்டே மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார், அந்த பெண்மணி . மனிதர்களுடைய புத்தி எப்படியெல்லாம் வேலை செய்யுமென நினைத்துக்கூட பார்க்கமுடியாது . ஆண்டவன் பணக்காரர் ,ஏழை என்ற வித்யாசமேயில்லாது சுபாவத்தை கொடுத்திருக்கிறார்.
சில ஜனங்களுக்கு, பகிரங்கமாக அவமானம் என்றால்தான், கலங்குகிறார்கள். நம்மில் பெரியதவறு என்னவென்றால், நம்முடையவர்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்ற அதீதமான நம்பிக்கையிருக்கிறது. மனதில் கல்மிஷமுள்ளவர்கள் எல்லா இடங்களிலும் காணப்படுவார்கள் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். திருடிய கைகளும், பொய் பேசிய வாய்களுக்கும் சமயம் வந்தால் விடாது.
Leave A Comment