பக்தி என்பது பலவிதமானது. பக்தி என்றால் பயம் என்று கிடையாது. அது ஒரு விதமான ப்ரீதி அல்லது ஆசை. பக்தி என்பது ஒரு விதமான உணர்வு. இதை சொல்லியோ, தண்டித்தோ வரவழைக்க முடியாத ஒன்று. பக்தி என்றிருக்கிறதே அதுதான் ஆண்டவனிடம் வரும் பக்தி. அது எந்த ஆண்டவனிடமும் வரும். இது ஒரு உன்னதமான ஒன்று. அனுபவித்திருந்தால் தான் புரியும்.ஆண்டவனிடம் வரும் பக்தி அலாதியானது.

ஆனால் அன்பு என்பது யாரிடம் வேண்டுமாலும் வரும். நம் வீட்டில் வந்து வேலை செய்பவர்களிடமும் வரலாம் , அந்நியரோடும் வரலாம் . முதன்முறையாக பார்ப்பவர்களிடமும் வரலாம். நம் அடுத்த வீட்டுக்கார்ர்களிடமும் வரலாம்.

சில வகையான பக்திகள் நம் சுயநலத்திற்காக ஏற்படுத்திக்கொண்டபக்தி. ஆனால் TV அல்லது சினிமாவில் வரும் நடிகையிடம் அல்லது நடிகருடன் வரும் பக்தியை என்னவென்று சொல்லமுடியும்.இந்த பிரேமைக்கு ஈடு இணையேஇல்லையோ என்று நினைக்கத்தோன்றுகிறது. தங்கள் மன இன்பத்திற்காக ஏற்படுத்திக்கொண்ட ஒரு பழக்கம் அடிமையாக்கிவிட்டது நம் மக்களை.