வயது முதிர்ந்தால்தான், பெரியவர்கள்ஆகலாமென எந்த சாஸ்திர புத்தகங்களிலும் உரைத்திருக்கவில்லை. உண்மையில் சாதாரண மனித ஜென்மங்களுக்கு வித்யாசப்படுத்தி பார்ப்பது என்ற குரூரமான புத்தியையும்,அதே ஆண்டவன்தான் அருளியிருக்கிறான். ஶ்ரீஆதிசங்கர்ரும், ஶ்ரீரமணமகரிஷியும் எந்த மடத்தையும் ஆளப்பிறக்கவில்லை. அவர்கள் ஆத்மாதான் அவர்களுக்கு குருவாக இருந்து, அவர்களை யாரும் தூக்கி உயர்த்தபார்க்காமலே உயர்ந்த மகான்கள். மகான்களை எவரையுமே உயர்த்தி வைத்து வளர்க்க முடியாது. தன்நிலை என்ன என்பதே மகான்களுக்கு தெரியாது. பொன்னைப்பார்த்தாலும், புல், பூண்டுகளை பார்த்தாலும் புனித ஜென்மங்கள் வித்யாசமேயில்லாது காண்பார்கள்.மகான்களுக்கு பகவானும், பரம விரோதிகளும் ஒன்றாகவே தெரியுமாதலால் வித்யாசமேயில்லாது காணுவார்களாம்.மகான்களையும், புண்ணிய ஆத்மாக்களையும், துரோகம் இழைப்வர்களையும் கூட ஒரு தாயார், ஒரு பெண்மணிதான் பெற்றெடுக்கிறாள், ஆனால் இந்த பாழும் உலகில் புனிதமானவர்கள் கற்றுக்கொள்ள அவதரிக்கவில்லை, பலர் காட்டு செடிகளைப்போல் பிறந்து விட்டபடியால் எதையுமே ஜனங்களுக்கு போதிக்கவே பிறந்திருக்கிறார்கள்,என்றே நினைத்துக்கொள்கிறோம்.

திருடர்கள் பணக்காரனையும்,பிச்சைக்காரனையும்,ஒன்றாகவே பார்ப்பார்கள். திருடனுக்கு வேண்டியது பணமே தவிர பணக்காரனின் பணமா இல்லை பிச்சைக்காரனின் பணமா அல்லது தேவைக்காக வைத்திருக்கிறார்களாஇல்லை, அதிகத்திற்கு மேலக வைத்துள்ளார்களா என்றா யோசித்திருப்பார்களா? பணத்திற்கு ஜாதி மத பேதமோ,சிநேகிதமோ, பங்காளிகள் என்பதெல்லாம் கிடையாது.அதே போலவேதான் உலகில் பிறந்துள்ள யாவருக்குமே அத்யாவசியமான ஒன்று பணம்தான். சிலருக்கு கேட்காமலேயே கிடைக்கிறது.பலருக்கு கேட்டு வாங்கும் நிலைமையை கொடுத்திருக்கிறார் ஆண்டவன். மனிதர்களுக்கு தேவை பணம் படைத்திருந்தாலும் மன சாந்தியுடன் கூடிய நல்லதொரு வாழ்க்கை. எதையும் கேட்டுப்பெறும் நிலைமை வந்தால் கீழ்க்கடை நிலைதான்.

வயதில் பெரியவர்களாகி முதிர்ந்து விட்டபோதிலும், மனமுதிர்ச்சியில்லாலாதவர்களை சமூகம் ஒதுக்கிவைத்தே பார்க்கும். பணத்திற்காக வாழ்பவர்கள், சிநேகம் வைத்திருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் விலகி விடுவார்கள். பெயருக்கு பெரியவர்கள், பூமிக்கு பாரமேதான். கேட்பதற்கு கொடுமையான வார்த்தைகளாக இருந்தாலும் இதில் உண்மை பொருந்தியிருக்கின்றது என்பதை மறுக்கவேமுடியாது.