பணக்கார குடும்பமோ ஏழைக்குடும்பமோ உறவினர்கள் ஒன்றிரண்டு ஆட்களாவது யாவருக்கும் இருப்பார்கள். ஆனால், எவரையுமே நாமும் நம்பிக்கைக்கு பாத்திரமாக எடுத்துக்கொண்டு பொக்கிஷம் மாதிரி காப்பாற்றிவைத்துக்கொண்டிருப்பவைகளை, எந்த ஆட்களிடமுமே ஒப்படைத்து விடக்கூடாது. நம்முடைய சொந்தங்களே நம்க்கு துரோகம் செய்துவிட நினைப்பார்கள். அவர்கள் சுபாவம் அது. நாம் அவர்களை ஏன் நம்புகிறோம்,நம்மால் நம்மவர்களை, சந்தேகிக்க முடியவில்லை, அதுவும் நம்முடையவர்களே, நம்க்கு துரோகம் செய்யமாட்டார்கள் என்றும் எண்ணுகிறோம், நாம்தான் அவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை.அவர்களுடைய பிறவி சுபாவம் அதுதான். நம்உறவுகளை நம் கைகள், கால்கள் போல் நினைத்து நம்புகிறோம். அவர்களுக்கும் துரோகம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதில்லை,அவர்கள் குணம் அதுதான். நாம்தான் புரிந்துகொள்ளவில்லை. மிருகங்கள் மிருகங்களாகத்தான் இருக்கும், பறவைகள் பறவைகளாகவேதானே இருக்கும். இதுவரை சான்ஸ் கிடைக்கவில்லை, இப்போது கிடைத்துள்ளதை உபயோகித்து கொள்ளலாமென்றமட்டமான சுபாவம் வெளியில் வந்துள்ளது அவ்வளவுதான். இதற்கெல்லாம் காரணம் சந்தர்ப்பசூழ்நிலைகள்தான். இந்த உலகில் நம்பிக்கை என்பது ஒரு விலையுயர்ந்த பொக்கிஷமாக கருதப்படவேண்டிய ஒன்று. ஆனால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்து கொண்டுவிடவேண்டும் என்று நினைப்பவர்கள் குறைவுதான். தன்மானம் என்ற ஒன்றை அடைந்தவர்கள் தன்னுடைய கௌரவத்தை மட்டுமே மேலாகவே நினைப்பார்கள்.அதை காப்பாற்றி வைத்துக்கொள்ள படாதபாடும்படுவார்கள்.
மற்றும் பலரோ வேடிக்கை பார்த்துவிட்டு அடிப்போரில் நெருப்பு வைக்க காத்திருப்பார்கள். குடும்பகௌரவம், பழக்கதோஷம் எல்லாம் அடித்தளத்தில் கிடக்கும். உக்கிரமான எண்ணம் காத்திருந்துதான் அடிக்கும்.
Leave A Comment