காதடங்கிய மனிதர்களின் கதியை காணும்போது அவர்கள் மனதில் எந்தமாதிரியான போராட்டம் நடந்துகொண்டிருக்குமென்பதை எவராலும் யோசிக்கக்கூட முடியாது.காதடங்கி உட்காந்தபின் உலகத்தில், வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல்,புரியாமல் இருக்கும். ஆனால்,அவர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டத்தை பற்றி யார் கேட்பார்கள்? ஆனால் எல்லாவற்றையும் கேட்டோ, கேட்காமலோ பிறருக்கும் எதுவுமே புரியவிடாதபடி செய்து விடுவது போல் ஒரு தோற்றத்தை உண்டு பண்ணி விடுவார்கள்.ஆனால் உண்மையில் கூறப்போனால் காதடங்கியவர்கள், மற்றவர்களைவிட அறிவாற்றலில் சிறந்தவராக திகழ்வார்கள்.ஏனெனில் அவர்கள் மன ஓட்டத்தின் வேகத்தை அவர்களை விட எவருமே கணிக்க முடியாதபடி சிறந்து விளங்குவார்கள்.காலடி ஓசையை கேட்க முடியாது, ஆனால் முகஅசைவுகளைக்கண்டு எந்தபேச்சின் முடிவையும் கண்டுபிடித்து விடுவார்கள்.அவர்கள் புரியாத மொழியொன்று இருக்குமானால் பிறர் சிரிப்பு மட்டும்தான். மற்றவர்கள் எதற்காக சிரிக்கிறார்கள் என புரியாதபடி எரிச்சல் அதிகமாகி விடும்.
காதடங்கியவர்கள், வீட்டிலுள்ளோர் பேசி சிரித்து கொண்டிருந்தால் தன்னைப்பற்றியேதான் பேசுகிறார்கள் என நினைத்து வேதனை அடைவார்கள். வெளியில் கூறவும் பிடிக்காமல் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டும் மறுகுவார்கள். மேலும் அவர்களுக்கு ஒருவிதமான பீதியும் ஏற்பட்டு, அறிமுகமில்லாத முகங்களை கண்டு பீதியடைவார்கள். கணவன், மனைவியாக இருந்தால், மனைவி தன்னுடைய கூப்பிட்ட குரலுக்கு பதில் தருவதில்லையென குற்றம்குறைகளை கூறுவார்கள். வீட்டிற்கு விசிட்டர்கள் வந்தால் தன்னுடன் பேசவில்லையே என ஆதங்கப்படுவார்கள், ஆனால் வந்திருந்தவர்கள் பெரியவர்களை அனாவசியமாக தொந்திரவு செய்யக்கூடாதென நினைத்திருப்பார்கள், ஆனால் இவர்களின் மனது வேறு விதமான குதர்க்கபுத்தியுடன் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.காதடங்கி விட்ட போதிலும், மனம் அடங்காமல் தவிப்பார்கள்.அதன் எதிரொலிதான் தன்னுடன் எவரும் பேசுவதில்லை என குறைபடுவது.தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மையை தவிர்க்கபார்க்காது, கிளறிவிட்டுக்கொண்டு தானும் மனவேதனை அடைந்து, மற்ற்றவர்களையும்,வேதனைக்குள்ளாக்கி விடுவார்கள். மனிதர்களுக்கு எந்த குறைபாடுகள் இருந்தாலுமே தன்னுடன் கூட வசிப்போர்களும் அதை அனுபவிக்க வேண்டுமென நினைப்பது போல் ஒருகுரூரமான எண்ணமும் தோன்ற ஆரம்பித்துவிடும் போல் நடந்து கொள்வார்கள்.
இந்த நிலைமையில் அவர்கள் யாருடன் வசித்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் கதி மிகவும் கடினமானது.எதற்கும் ஒத்துவராமல், குற்றங்களை தேடித்தேடி கண்டுபிடித்து தகராறு செய்ய காத்துக்கொண்டிருப்பார்கள்.விடவும் முடியாது வைத்துக்கொள்ளவும் முடியாத ஒரு நிலைமை.
Leave A Comment