ஒரு சில வீடுகளில் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டேயிருக்கும். சில வீடுகளில் எந்த திசையில் பிள்ளைகளை திருப்பவேண்டுமென்று புரியாமல் தவிப்பார்கள். பெற்றவர்கள், வீட்டிலுள்ள பெரியவர்கள் இந்தமாதிரி நடந்துகொண்டால் பிள்ளைகள் என்ன செய்யமுடியும் என்பதுதான் பிரச்னை. சில பிள்ளைகள், சிறிய வயதில் தினந்தோறும் குடும்ப சண்டைகளையே கவனித்து வளர்ந்த பிள்ளைகள் மிகவும் சாமர்த்தியமாக பேசி சமாளிக்க கற்றுக்கொண்டு விடுவார்கள்.பெரியவர்களானபின், தானும் சண்டையிட்டால்தான் தனக்கு கிடைக்கவேண்டியதை சாதித்துக்கொள்ளமுடியுமென தீர்மானித்துக்கொண்டு விடுவார்கள். வீட்டில் என்றைக்கோ ஒருநாள் சண்டை நடந்தால் பிள்ளைகள் திக்கு முக்காடி விடுவார்கள். பழக்கமில்லாதபடியால் என்னசெய்வது யாரை சப்போர்ட் செய்வது என்று புரியாமலும்தவிப்பார்கள்.

முதல்நாள் சண்டையில் அப்பா வீட்டை விட்டு வெளியேறிவிடுவதாக கூறியவர் இன்னம்கிளம்பவில்லையே என நினைக்கிற பிள்ளைகளும் உண்டு.அப்பா கிளம்பிவிட்டாரானால் நம்க்கு பிராப்ளம்ஸ் என்றால் நம்மைகாப்பாற்ற எவருமே இருக்க மாட்டார்கள் என்றால் பயம் பிடித்துக்கொள்ளும். கவலை,பயம் இந்த இரண்டிலும் அவதிப்படும் பிள்ளைகளுக்கு தன்னைப்பற்றிய கவலையை விட யாவரையுமே விட்டு விட தீர்மானித்தாலும் அதிசயமில்லை. பிள்ளைகள் சிறிய வயதில் குடும்பங்களில் சண்டை கவலைகளை பார்த்து, கேட்டு மனம் உடைந்து போவார்கள், அதை யாரிடம் பேசுவது என்று புரியாமலும் தவிப்பார்கள். நண்பர்கள் குழாமிலோ எவராவது ஒருவர் பேசினாலும் கூட மனதை திறந்து கொட்ட தயாராக இருப்பார்கள், ஆனால் அந்தசான்ஸ் கிடைக்கவேண்டுமே?

இதே பிரச்னைகளை பெண்பிள்ளைகள் அனுபவிக்க நேர்ந்தால் தங்களுக்கென இருக்கும் சிநேகித கும்பலுடன் மனதை திறந்து கொட்டி பேசி அலசுவார்கள்.ஒருவர் வாயைதிறந்தால் போதும் ஒருவர்பின்ஒருவராக நிறைய பெண்கள் கலந்துகொள்ள முயற்ச்சிப்பார்கள்.அவரவர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகளை கண்,காது வைத்து அழகாக ஜோடித்தும்,தனக்கு அனுதாபம் கிடைக்க வெகு சுவாரஸ்யமாக பேசிக்கொள்வார்கள். ஆண்களை விட பெண்களுக்கு குடும்பத்தில் நடந்து வரும் தகராறுகள் நன்றாகவே புரியும். சண்டை என்று வந்துவிட்டால் குறுக்கு வழிகளும் தெரிந்துகொள்வார்கள், எப்படி சமாளிக்கவேண்டுமென. குடும்பம் என்பது சாமான்ய விஷயமில்லை.அதுவும் இந்நாட்களில் பெற்றவர்களைவிட, பிள்ளைகள் அதிசாமர்த்தியமாகவே எல்லாவற்றையும் கையாளுகிறார்கள். அது நல்லதுதான். தன் பணம்,காசு என்று வரும்போது அதிகவனமாகவும் கையாளுகிறார்கள்.சகோதர, சகோதரிகளுடன் வாழ்வதற்கும், தனியாக வாழ்வதற்கும் நிறைய வித்யாசம் உள்ளது. தனிமையும் வாட்டுகிறது.மனம் திறந்து கொட்ட ஆட்களில்லை.துரதிஷ்டமான ஒரு நேரம் எல்லோருடைய வாழ்க்கையிலும் உண்டாகி விடுகிறது, நாம்தான் அதை அமர்க்களப்படுத்தாமல் கடந்து விட வேண்டும்.