நம்மில் பலர் நம்முடைய தவறான குணங்களை ஒத்துக்கொள்ளவே மாட்டோம். இது உலக இயல்பு, உங்களுக்கென்று ஒரு ஸிஸ்டம்,எனக்கென ஒன்று என்று தனியாக கிடையாது. யாவருக்கும் உள்ள ஒரு கொடுமையான,ஆனால் ஒத்துக்கொள்ளமுடியாத ஒரு குணம் கோபம்.வீட்டில் விருந்தினர் வரப்போவதாக முன்கூட்டியே கூறியிருப்பார்கள். வீட்டை எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பது போல ஒரு பாவனைக்காக வீட்டை சுத்தம் செய்து காத்திருப்பார்கள். வீட்டுப்பெண்மணிகள் தின்பதற்கு கொடுக்க மற்றும் வெற்றிலைபாக்கில் வைத்துக்கொடுக்க கூடியவைகளை தேடியெடுத்து வைத்து,வீட்டில் எதுவுமே இல்லையென்றால், வாங்குவதற்கு யாரையாவது ஏவி ஏற்பாடு செய்து, வீட்டிலுள்ளோரை அருட்டியும், அன்பாகவும் பேசி விருந்தினரை வரவேற்க எல்லாவற்றையும் தயார் செய்து,தங்களையும் தயார் செய்து கொண்டு காத்திருக்கும் போது ஒரு போன் வரும்,அவர்கள் வீட்டில் திடீர் விருந்தாளி வருகிறார்கள், என போன் வந்துள்ளதால் நம் வீட்டிற்கு வருவதை ஒத்திப்போட்டதாக நம்மிடம் தெரிவித்தால் நம்க்கு எப்படியிருக்குமென என்பதை கூறக்கூட பிடிக்கவில்லை.இதற்காக நம்வீட்டுக்காரர்கள் மண்டையை உடைத்துக்கொண்டு தகராறு செய்வோம்.
வரப்போவது நம்சிநேகிதர்கள்,நம்முடைய சொந்தமனிதர்களைப்போல் இருந்தாலும்கூட நம்மில் பலருக்கு கோபம் ஏற்பட்டு சொந்தபந்தங்களை கூட ஒதுக்கி தள்ளிவிட்டு விடுகிறோம்.இதே போலவே எவரிடமாவது ஒன்றுக்கு இரண்டாக உபயோகமுள்ள சாமான் இருந்து நம்க்கு ஒன்று வேண்டுமா என கேட்டுவிட்டபின் நாமும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ள தயார் செய்துகொண்டபின்,என்னுடைய மச்சினரின் சிநேகிதன் நேற்றே வந்து அதை எடுத்துக்கொண்டு போய்விட்டார், இந்த விஷயம் லேடிஸ் நமக்கும் முன்பாகவே பேசியிருக்கிறார்கள் போலிருக்கிறது, ஆகையால் எனக்கு உங்களிடம் இந்த விபரத்தை கூற வாய்ப்பில்லாமல் போய்விட்டது ஸாரி,ஸார்எனக்கூறுவதை நாம் கேட்டால் நம்க்கு எப்படியிருக்கும்? தனக்குத்தெரிந்தாற் போலவே அவர்களும் காண்பித்துக்கொண்டிருக்க
மாட்டார்கள்.பொய்யா,உண்மையா என ஆண்டவனே நிர்ணயிக்கவேண்டும். இப்படியாக சொந்த,பந்தங்களுக்கு நடுவில் கூட மன உளைச்சல்கள் ஏற்பட்டு விடுகிறது. குணவான்களைக்கூட குணக்கேடு ஏற்படும்படியாகவும், உதறியெறியும்படியான சந்தர்ப்பங்களும் அமைந்து விடுகின்றன.இந்த மாதிரியான நேரங்களில் சற்று பொறுமையை இழக்காமல் இருக்கவேண்டியதுதான் மிகவும் அவசியம். அவசியமில்லாத ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை.
Leave A Comment