தவிக்கும் மனது சஞ்சலமற்றதாக இருந்தாலும், மனது குழப்பத்தில் தவித்துக்கொண்டுதானிருக்கும் என்பதே உண்மை. எதற்காக என புரியாமலே நிறைய ஆட்கள்,அவரவர் செய்து கொண்டிருந்தவைகளை பிறருக்காக விட்டுக்கொடுத்துவாழக்கற்றுக்கொடுத்து, எத்தனையோ தங்கள் சௌகர்யத்தை குறைத்துக்கொண்டு வாழ்ந்தும் வருகிறார்கள். ஆனால் எவருக்காக எதை விட்டுக்கொடுத்தாலும், நம்மிடமிருந்து உதவியையும், அனுகூலமான வார்த்தைகளை கேட்டவர்களோ பதிலுக்கு நம்மிடம் துளிக்கூட பிரியமான வார்த்தைகளை உதிர்க்காவிடில் நமக்கும் நம்மைப்பற்றியே தெரிய வராது என்பதே உண்மை. நாம் நம்மையே உயர்ந்தவர்களாகவும் தன்னைத்தானே நினைத்து கர்வமடைய மாட்டோம். எவருக்குமே நம்மைப்பற்றி பிறர் பேசிக்கேட்டால்தான் நம்மனம் மகிழும். நமக்கு நாமே உயர்வாக நினைப்பவர்கள் இருந்து வருகிறார்கள்.ஆனால் நம்மைப்பற்றி வேறு எவரோ கூறினால்தான் நம் மனமும் துள்ளிக்குதித்து கிளம்பும். மனித மனங்கள் தங்களை பற்றிய புகழ்ச்சியை கேட்டு மயங்காத மனம் இருக்கவே முடியாது. எத்தனையோ சாதனைபடைத்தவர்கள் கூட தம்முடைய சாதனைகளைப்பற்றி பிறர் பேசும்போதுதான் கேட்டு உண்மையை உணர்ந்து மகிழ்வார்கள்,மற்றும் பூரித்துப்போவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.புகழ் கிடைக்க,கிடைக்க எதுவாக இருந்தாலும் மேலும்,மேலும் பிறர் வாயிலிருந்து கேட்டுப்பூரித்துப்போகாத மனமும் இருக்குமா என்பது சந்தேகமே.புகழ்ச்சிக்கு மயங்காத மனம் எங்குள்ளது?