காலம் எதற்கும் காத்திருக்காது. ஆனாலும் மனிதர்கள் எதற்கெடுத்தாலும் காலம் கடந்துவிட்டது, நமக்காக காலம் காத்திருக்காது எனவும் கூறுவார்கள். முன்பெல்லாம் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் அதை நன்றாக கவனித்துவாழ்க்கையை நடத்தவேண்டும் என பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றைக்கு இருமியபோது கட்டிய தாலி தும்மும்போதுஅறுந்துவிட்டது போல், தாலி கயிற்றில் தொங்குவதற்குள், அறுந்து விழுந்துவிடுவது போல் ஒரு தோற்றம் ஏற்படுகிறது என்னவோ உண்மை.ஆனால் அடி கொடுப்பவர்களுக்கும், வாங்கிக்கொள்பவர்களுக்கும் நிறைய வித்யாசம் உள்ளது, என்பதை மறுக்கவே முடியாது. அன்பின் பிணைப்பிற்கும், ஆணவத்தின் அதிகாரத்திற்கும் வித்யாசம் நிறைய உள்ளது என்பதைமறுக்க முடியாது. மனித வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்களை கண்டவர்கள் நடத்தைக்கும், எதையும் கண்கூடாக காணவில்லையென்பதற்கும் வித்யாசம் இருக்குமென்பதை எவராலும் மறுக்கமுடியாது.

காலங்கள் அலங்கோலங்களாக மாற்றுவதற்கும் நேரம் எடுக்காது என்பதை அவரவர் உணரும் போதுதான் நன்கு அறிய முற்படுகிறோம்.ஆனால் பிணைப்பு என்ற ஒரு உறவை ஏற்படுத்திக்கொண்டபின் தாறுமாறாக முறித்துக்கொள்ளவும் மனிதர்கள் தயங்குவதேயில்லை.வாழ்க்கையின் பல கோணங்களை பார்த்தவர்களுக்கு முறித்துக்கொண்டு விடவேண்டுமென்று தோன்றிவிட்டால் வேறு வழியில்லாமலும் போய் விடுகிறது. காலதேவனும் எத்தனை அவகாசம் தருவான் என்பதும் நிச்சயமில்லை. வாழ்க்கையில், துணிமணிகளை மாற்றுவது போல உறவினர்கள் மாற்றுவது கடினமான வேலை என நினைத்திருந்த நமக்கு, குடும்பத்தை உடைக்க ஆயுதம் தேவையில்லை, மனோபலம்தான் அவசியம் என புரிகிறது.
நாம் முடிவெடுத்தால் நல்லமுடிவாகத்தான் இருக்க வேண்டுமெனநினைத்து செயல்பட வேண்டும். யாரும்,எவருக்காகவும் காத்திருக்கப்போவதில்லை, டயம் அதே போல் மாறி,மாறியே வருகிறது. வாழ்க்கை எத்தனை அநித்யமானது என்றும் புரிந்தாலும், செயல்படமுடியாத நிலைமை.