உலகத்தில் நாம் வந்தது எதற்காக என்பது எவருக்கும் தெரியாது, எத்தனைகாலம் இந்த உடலில் உயிர் தங்கி இருக்கும், எவருக்கும் புரியாத புதிர்,ஆனால் எல்லாமே நாம் நினைப்பது போலவே நடந்துவிடவேண்டும், மேலும், மேலும் நாம்எல்லாவற்றிலும் வெற்றிகளையே காண்போம் எனநினைத்தே செயல்படுகிறோம். எதுவும் புரியாத புதிர் என்பதை நாமே கண்டுகொண்டாற்போல் பேசுகிறோம்,செயல்படுகிறோம்.இது ஒருவிதமான மனித வாழ்க்கையின் உண்மையான அல்ப சிந்தனையாகும்.அடுத்த வினாடி எல்லாமே முடிந்து விடலாம். ஆனால் நாம் அடுத்த தலைமுறைக்கு சேமித்து கொடுத்து வாழவைக்கப் போவதாக பிளான் செய்கிறோம். எவர் இருப்போமோ, இல்லையோ உலகம் அழியப்போகும் காலம் நெருங்குவதாக கூறுகிறார்கள்.
அதாவது இன்னும் ஒரு நூறுவருடங்களாவது இப்படியே ஓடும். நூறு வருடகணக்கென எடுத்துப்பார்த்தால் குறைந்தது மூன்று தலைமுறைகள் வளர்ந்துவிடும். பொதுவாக இந்த உலகமானது எவருக்கும் சொந்தமில்லை.தானாக உருவானது, தானாகவே முடிந்தும் விடும்.யாருக்காகவும் எதுவும் காத்திருக்கப்போவதில்லை,எதற்காகவும் தயங்கப்போவதுமில்லை. நாம்தான் உலகத்திற்காக வாழ்கிறோம், உலகம் நமக்காகவோ வேறு எதற்காகவும் காத்திருக்கப்போவதில்லை. ஆனால் மரணம் நேரப்போகிறது என்றபயம் வந்துவிட்டால் அது எதற்காகவும் மாறப்போவதில்லை. மரணத்தை ஒத்திப்போடுவது என்பதை எவராலும் செய்யவேமுடியாத காரியம்.
ஆனால் நன்றாக வாழும் வரை அந்த பயம் வருவதில்லை, தவறிகாலை வைத்துவிடும்போது இவையெல்லாம் தோன்ற ஆரம்பிக்கிறது.
ஆனால் அதற்குள் மனதுக்குள் ஒரே போராட்டமாகவே உள்ளது. வேண்டியவைகளும், வேண்டாதவைகளும் ஞாபகத்திற்கு வருகின்றன. நம்மால் மனதை கட்டுப்படுத்தவும் கட்டாயப்படுத்துவதும் முடியாத காரியமே. வாய்பேசும், நான்இருந்தாலும் என்ன,போனாலும் என்ன எல்லாம் ஒன்றுதான் என்று.ஆனால் மனதுக்குள் திக்,திக்கென்று அடித்துக்கொள்கிறது.படுக்கைக்குப் போகும் முன் சுவாமியை பிரார்த்தித்து விட்டுத்தான் படுக்க போவோம். நம்மில் பலர் ஸ்லோகங்களை கூறிவிட்டுத்தான் படுக்கைக்குப்போவார்கள். நமக்கென எத்தனைவருடங்கள்,நாட்கள் விதித்திருக்கிறதோ அத்தனை வருடங்கள், மாதங்கள்,நாட்கள், வினாடிகளுக்கு மட்டுமே இந்த உலகில் தங்கியிருப்போம்.
Leave A Comment