ஒரு சில மனிதர்கள் கற்பனையிலேயே மிதந்து கொண்டிருப்பார்கள். அவர்களால் எதையுமே சாதித்துக்காட்ட முடியாமலிருப்பார்கள், ஆனால் சாதித்துவிட்டாற் போல் பேசுவார்கள். இந்தமனப்போக்கு கொண்டவர்களை எத்தனையோ ஆட்கள் கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்ன பதில்பேசவேண்டுமென புரியாமல் தவிர்ப்பார்கள், ஏன் தவிர்க்கபார்க்கிறார்கள் என பிறருக்கும் புரிவதில்லை.இதுமாதிரி குணம் படைத்தவர்களை என்னவென்று கூறுவது? கற்பனைகாட்சிகள் உண்மையாக நடப்பது அரிது. ஆனால் மிதக்கும் மனதை அடைந்தவர்கள் கற்பனையிலேயே காலத்தை ஓட்டப்பார்ப்பார்கள். அவர்களுக்கும் தங்கள் நிலைமை புரிபடாது பேசுவார்கள். ஆனால் பிறர் நிலைமையை விசாலமாக தெரிந்து கொண்டுவிட்டாற் போலவும் பேசுவார்கள், நினைப்பதற்கு மாறாக. வேறு எவரையும் பேசுவதற்கும் அனுமதிக்காமலும் பேசிக்கொண்டேயிருப்பார்கள். இந்த உலகில் வந்துள்ள யாவருக்கும் ஏதாவது ஒரு நோக்கமிருந்தே தீரும்.அவசியமில்லாத பேச்சு வார்த்தைகளும் வந்துவிடலாம்.

ஆனாலும் நம்வேலை என்ன? நோக்கம் என்ன என்பதே எவருக்கும் புரியாத புதிராக இருக்கும். நம்யாவருடைய எண்ணங்களும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை, நேர்க்கோட்டில் நடப்பவர்கள் சிறிது கோணலாக நடக்கும் போது அவரவருக்கு தெரியாமலும் இருக்கலாம். பார்ப்பவர்களுக்கு வெகு சுலபத்தில், குற்றங்கள் தெரிய ஆரம்பித்து விடும்.தினசரி ஒரேமாதிரியாக இருக்கும்போது வித்யாசமே தெரிவதில்லை. ஆனால் சில மனிதர்களுடைய சுபாவம் வித்யாசமாகவே உள்ளது. இந்தபரந்த உலகில் வெவ்வேறு விதமான மனிதர்கள் பிறந்தும், மறைந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சிலருடைய வாழ்க்கையில் அவர்கள் லட்சிய இலக்கை நோக்கியே வாழ்வார்கள். மற்றும் சிலர் கிடைத்துள்ள நேரத்தை உபயோகித்துக்கொண்டு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்ந்து வருவார்கள். ஆனால் மற்றவர்கள் உருப்படியாக எதையும் செய்ய முடியாவிட்டாலும் குற்றம்,குறைகள் கூறுவதையாவது குறைத்துக்கொள்ளலாமே. எதுவும் நேரத்தின் கோளாறுதான் என குற்றத்தை ஒதுக்கிவிட்டால் எத்தனையோ நலமாக இருக்கும்.அனாவசிய வம்பு சண்டைகளுக்கும் அவசியமிராது.ஆனால் கற்பனையிலேயே காலத்தை ஓட்டுபவர்களுக்கு எந்த நலமான புத்திமதிகளும், உபதேசங்களும் ஒத்து வரவே வராது.