ஒரு சில மனிதர்களுக்கு வேறுபாடுகளின் முக்யத்துவம் புரிந்து கொண்டு தெரிந்து கொள்வதற்குள் வாழும் காலம் கூட முடிந்து விடலாம்.ஆனால் நாம்எதையுமே புரிந்து கொண்டு வாழும்போது உண்மையிலேயே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது.எத்தனை ஆண்டுகளாக இந்த வித்யாசத்தை புரிந்து கொண்டு, தெரிந்து வாழ ஆசைப்படுகிறோம்.ஆனால் அவசியத்திற்காக பலவற்றை பொறுத்துக்கொள்கிறோம். நம் சொந்தங்கள் வேறு, பந்தங்கள் வேறு என புரிபடவே வருடங்கள் எடுத்துக்கொள்கின்றன.ஆனால் எத்தனை வருடங்களானாலுமே அவருக்குள்ளவைகள் அங்கேதானிருக்கும். பொறுமையை கடைபிடித்துக்கொண்டு காலத்தை ஓட்டியாக வேண்டும்.

சில சொந்தங்கள் நம்முடன் அருகில் உள்ளவர்கள் போல் தோன்றினாலும், மனதளவில்தள்ளியேதான் இருப்பார்கள். ஆனால் நமக்கருகில் உள்ளதை போன்ற தோற்றத்தை கொடுத்து விடுவார்கள். நமக்குமட்டுமில்லாது பார்ப்பவர்களுக்கும் காண்பித்து விடுவார்கள். ஒரு அவசரமான சமயங்களில், நமக்கு உதவியாகவும் இருப்பார்கள்.ஆனாலும் நாம் சதாசர்வகாலமும் அதிகவனத்துடனேயே இருக்கவேண்டியது மிகவும் அவசியம். அவர்கள் நம் காலைவாரிவிடவேண்டுமென்ற எண்ணத்தில் வாழ மாட்டார்கள். அவர்களுக்கும் ஒரு சேன்ஞ் தேவையாக இருந்திருக்கலாம். மனித மனம் ஒரு குரங்கின் மனதைப்போலவேதான். க்ஷண சித்தம், க்ஷணப்பித்தம் என்று சுத்த தமிழில் கூறுவார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மையே. எவருக்கும் எவரைப்பற்றியும் கவலையுமில்லை, மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடுவதில்லை. ஆனால் சுற்றத்தில், சுற்றத்தார்கள் குற்றம் கண்டுபிடிக்க தயங்குவதேயில்லை. இந்த சுற்றங்கள் தங்களைவிட்டு நழுவாது என தெரிந்து கொண்டு அடிப்பார்கள். உண்மையில் கம்பு எடுத்து அடிகள் போடுவது கிடையாது. ஆனால் நாம் செய்வதற்கு பாதகமாக எத்தனையோ நேரங்களில் கிளப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். படிப்பதற்கு வேடிக்கையாக இருக்கும், அனுபவப்பட்டவர்களுக்கே அதன் மகிமை புரியும்.

உங்களில் எவருக்காவது சந்தேகமிருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.