வரும்படியேயில்லாத ஒரு குடும்பம் என்றால் அது எத்தனை துர்க்கதியாக இருக்கும் என நினைத்துப்பார்த்தேன். வருவாயை விட மனிதகுலத்திற்கு முக்யமான கௌரவம் மிகவும் அவசியம் என்பதையும் மனிதர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எதைப்பற்றியுமே கேட்கவும், கூறவும், சங்கோசமில்லாத வாழ்வென்றால் நினைத்துப்பார்க்கமுடியாத அளவிற்கு கூச்சமேயில்லாத மனிதர்கள்தான் என முடிவு கட்டிக்கொள்ளலாம். எதற்கும் எள்ளளவு கூட வெட்கமில்லாது வளர்ந்திருப்பார்கள் போலும். எல்லாவற்றையுமே கேட்டுப்பெற முடியாது. யோசித்து நடக்கவேண்டும். மனிதர்களுக்கு தாங்கள் எதற்கெல்லாம் பொறுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறோமோ அதை நிறைவேற்றியாக வேண்டும். எவர் பொறுப்பை கொடுத்துள்ளார்களோ சதா நம்மை துரத்திக்கொண்டே வரமாட்டார்கள். பொறுப்பை கொடுத்தவர்களைவிட எடுத்துக்கொண்டவர்களுக்குமே மிகவும் தர்மசங்கடமான நிலைமை என்பதை வலியுறுத்தி கூறுகிறேன். ஏனெனில் பொறுப்பை வாங்கிக்கொண்டுவிட்டதால், சரியோ,தவறோ நிறைவேற்றியாக வேண்டியது மிகவும் முக்கியம்.இரவோ பகலோ, பசியோ, துக்கமோ எது உங்களை பாதித்தாலும் உங்கள் பொறுப்பை உதறி தள்ளிவிட்டு ஓடமுடியாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.ஆண்கள் பொறுப்பற்றவர்களாக இருந்தாலும் பெண்மைக்கு குடும்பத்தை ஓட்டும் சக்தி, பொறுப்பு அதிகமாக உண்டு, என்ற உண்மையையும் யாவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

எது எப்படிப்போனாலும் பொறுப்பு என்பதற்கு பெரிய கண்காணிப்பு அவசியமே. மேலும் நமக்கென விதித்துள்ளவைகள் நமக்கு நடந்தே தீரும் என்றிருந்தாலும் வாக்குதவறியவர்கள் மற்றும் பொறுப்பை உதறி எறிந்தவர்கள் போன்ற அடை மொழிகளை கேட்டும் அனுபவிக்க வேண்டிய நிலைமை வந்து விடுவதிலிருந்து தப்பமாட்டோம் என்றும் பயந்து செயல்படவேண்டும். குடும்பத்தலைவன் சரியில்லாது போனாலும் குடும்பத்தலைவி கட்டுக்கோப்பாக வாழ்ந்தால்தான் குடும்பம் முன்னுக்கு வந்துவிடும். எந்தவீட்டில் தலைவிஉதவாக்கரையோ அந்தவீடு நசித்து விடுவது நிச்சயம். குடும்ப வாழ்க்கை என்பது நீர் மீது நடப்பது போன்றதொரு வாழ்க்கை என்றுதான் கூறவேண்டும். நமக்காக குறைவாகவும் குடும்பத்திற்காக யோசித்துப்பார்த்து, பார்த்து குடும்பத்தை பாதுகாத்து பெண்மணிகள் நடத்துவார்கள். அனாவசிய வார்த்தைகளைக்கொட்டி பெயரைக்கெடுத்து கொண்டு விடக்கூடாது. ஏனென்றால் வீட்டிற்கு வரும் மருமகள்பெண்களும் குடும்பத்தின் பொறுப்பை யோக்யமான முறைகளில் நடத்திக்கொண்டு செல்லவேண்டும். அப்போதுதான் குடும்பம் நல்லமுறையில் வளரும் என்பது நிச்சயமானதும் கூட. ஒரு சில பெண்மணிகள் குடும்பத்திற்கு மிகவும் ஒற்றுமையாக இருப்பதைப்போன்ற நாடக பாவனைகளுடன் பேசுகிறார்கள். ஆனால்நடைமுறையில் மனதில் கல்மிஷம் மிகுந்தவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். வாழ்க்கைக்கு பணம் காசு எத்தனை அவசியமோ, அதை விட நல்லகுடும்ப பாங்கான மனமிருக்கும் பெண்மணிகளும் முக்யமே. குடும்பபாங்கு தவறும்போதுதான் குடும்பங்களும் குடைசாய்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை.