மனிதர்களால் தனியாகவே வாழ முடியாது. உறவினர்கள், சிநேகிதர்களின் அல்லது உறவினர்களின் நடுவில்தான் வாழ விருப்பப்படுகிறோம். சண்டை போடவோ இல்லை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவோ, இந்த மாதிரி சிநேகம் என்பது யாரிடம் வேண்டுமானாலும் வரலாம். ஊர்வம்புகளை பேசவுமே ஆட்கள் வேண்டுமே. நம் குணங்களுக்கு ஏற்றாற்போல் நம் உடன் பிறந்தவர்களிடமோ, சிநேகிதி, சிநேகிதர்களின் குணங்களுக்கும் எல்லாவற்றிலும் ஒத்து வருவது என்பது கடினமானதால், யார் எந்த சுபாவமாக இருந்தாலும் அவர்களை அப்படியே ஏற்று கொண்டு சிநேகத்தை தொடர்வதுதான் சரியான முறையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஒவ்வொருவரையும் நம் குணத்திற்கு ஏற்றாற்போல் பழக்கி , நாம் சிநேகமாக இருப்பினும் சமய சந்தர்ப்பம், மாறும்போது அதற்கேற்ப குணமும் மாறி சிநேகம் துண்டித்து விடும்.
சில மனிதர்கள் தான் சொன்னதே சரியென்று வாதாடி, மற்றவர்களின் பேச்சை jஏற்காமல்,பேசித்தள்ளுவார்கள். சுற்றியுள்ளோருக்கு எதுவுமே தெரியாது என்கின்ற மாதிரி நினைத்து, மற்றவர்களை பேசவே விடாமல் சிலர், பிறர் வாயடைத்தும் பேசுகிறார்கள். இன்னம் சிலரோ குரூப்பில் உட்கார்ந்து, தானும் பேசி , பலரையும் பேச விட்டு , வாயைக்கிண்டி விட்டு வேடிக்கை பார்த்து, கேட்டு, யார்,யாரைப்பற்றி என்ன பேசுகிறார்கள் என்று காதை தீட்டிக்கொண்டு கேட்டு, அதே பேச்சை எப்படியெல்லாம் திரித்து கூறி வத்தி வைக்கவும் பிளான் செய்வார்கள். அந்த பேச்சுக்களுடன் மசாலா கலந்தும் பொய் பேசி தங்கள் தாகத்தை தணித்துக்கொள்கிறார்கள்.
இன்னம் சிலரோ தான் எதிலுமே கலந்து கொள்ள இஷ்டமில்லாது மாதிரி வேஷமாடி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு சிலமனிதர்கள் , தன் பேச்சையே யாவரும் கேட்கவேண்டும் என்பதில் கவனமாக தன்குரலை உயரத்தி , ஏற்றி, இறக்கி அழுத்தம் திருத்தமாக அர்த்தமேயில்லாது சத்தமாக பேசுவார்கள் . மற்றும் சிலரோ வலுக்கட்டாயமாக இவர்களுடன் சிநேகமாக இருக்க வேண்டாமென நினைத்து குறுக்கே சம்பந்தமேயில்லாமல் எதையாவது நம்மையும் மாட்டிவிட்டு, தனக்கும் தெரிந்தாற் போல் காட்டிக்கொள்ள வேண்டுமென நினைத்து பட்’ டென்று எதையாவது சொல்லி எல்லோர் வாயையும் அடைப்பதுபோல் பேசி விட்டு ஏதோ ஜோக் அடித்தாற்போல், தானே சிரித்துக்கொண்டும், யாவருடைய முகங்களையும் பெருமிதமாகவும் பார்ப்பார்கள், கேட்பவர்களுக்கு எதுவுமே புரியாது. ஆனாலும் புன்னகையுடன் நிற்க வேண்டியதாகி விடும்.
ஆனால் அசடாகவோ, அல்பதனமானவர்களின் சிநேகிதமோ இல்லை கணவன், மனைவியோ நமக்கு கிடைத்து விட்டார்களானால் நம் தலை விதியை நொந்து கொண்டாலும் சரி , மலையிலிருந்து கீழே உருண்டாலும் சரி , அந்த மனிதர்களுடன் சிநேகமாக இருந்து சமாளிப்பது என்பது கடினமேதான்.
கேள்வி என்னவென்றால் சிநேகித மாடல்களில் நாம் யாரைதேர்ந்தெடுத்து சிநேகமாக இருக்க முடியும் ?
,.
Leave A Comment