முத்து ராமலிங்கத்திற்கு கல்யாணம் நடக்குமா என நினைத்துப்பார்க்கக்கூட பிடிக்காமல் சுமார் நாற்பது வயதை தொடுகிறவரை தன்னந்தனியாகவே வாழ்ந்து வந்தார். நல்ல உத்யோகம், நல்ல வசதியான உற்றார், உறவினர் அல்லும் பகலும் அவரை கவனித்து கொள்ள கூடப்பிறந்தவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டிருந்தார். சமைக்கவேண்டாம், எந்தவிதமான இடையூறுகளும் இல்லாது வாழ்க்கை தண்டவாளத்திலிருந்து தடுமாறாமலும் ஓடிக்கொண்டிருந்தது, ஆண்டவனுக்கு கண்ணில் உறுத்தி விட்டது போல் படாரென்று , தாயார் ஹார்ட் அட்டாக்கில் நிமிட நேரத்தில் இறைவனிடம் போய்ச்சேர்ந்து, ஆறே மாதங்களில் தகப்பனாரும் கிளம்பி விட்டார், பரலோகத்திற்கு. இப்படியாக திடீரென்று குடும்பம் சுருங்கி முத்து தனியாளாகி விட்டார் . எந்தபக்கம் திரும்பினாலும் மனிதர்கள் காணப்பட்டிருந்த இடத்தில், எவருமே கண்ணில் படாமலிருந்தால் நல்ல குணவான்களால் மனதளவில் ஏற்றுக்கொள்ளாமல், தவிப்பு ஏற்படுமென்பது உண்மையே. கலந்துரையாட ஆட்களில்லை, முகம் பார்க்கும் கண்ணாடியை தவிர உண்மை மனிதர்களே கிடையாது. எப்பேர்ப்பட்ட சூரப்புலியாக இருந்தாலும் தனிமையில் மனது கலங்கி, சுருங்கிவிடும் என்பது உண்மையே.
காரியாலயம் போகும் நாட்களில் குறைந்த பட்சம் டயம் போவதே தெரியாமல் ஓடிவிடும். வீட்டில் உட்கார்ந்து கொண்டு மாற்றி, மாற்றி ஏதோவொன்று, செய்துகொண்டேயிருப்போம். இப்படியாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், அடுத்த வீட்டில் முத்தூ, முத்தூ என ஒருகுரல் கூப்பிட்டதும் தன்னைத்தான் கூப்பிடுவதாக நினைத்து என்னை யார்கூப்பிடுகிறார்கள் என நினைத்து, பதில் கூறுமுன் ஒரு இளம்பெண்ணின் பேச்சுக்குரல் கேட்டு, நம்ப முத்து ராமலிங்கம் சார், ஆவல் உந்தியதால் எட்டிப்பார்த்தால் அடுத்த வீட்டின் வாயிலில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணை கண்டதும் வாய்ப்பேச்சு நின்று மனம் துடிக்க ஆரம்பித்துவிட்டது என்பது உண்மையே.
முத்தூ என்ற பெயர் இன்னொரு ஆளுக்குள்ளதோ என நினைத்து , ஏங்கியது போக, அந்தபெயர் ஒரு அழகான பெண்ணின் பெயர் என்று தெரிந்ததும் இருதயதுடிப்பு இரண்டு முறையாவது நின்று மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. ஆனால் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டது, வெளியில் கூறத்தெரியாத காரணத்தினால், மனதுக்கு தெரிகிறது , ஆனால் வெளியில் கூற முடியாத நிர்ப்பந்தம். கூறிக்கேட்பதற்கும் ஆள்வேண்டுமே. யாவரும் மனித ஜென்மங்கள்தானே. இதுநாள் வரை தன்னைத்தவிர இன்னொரு முத்துஇருந்ததாக தெரியாதபடியால் ஆச்சரியமாகவும் இருந்தது. நினைத்து பார்த்தால் சிரிப்பாகவும் வந்தது. திடீரென்று மனிதமனதில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு விட்டது. மனதுக்குள் இனம் புரியாத ஒரு திருப்தியும் ஏற்பட்டது.
ஒருநாள் மாலைவேளையில் கொஞ்சம் நடந்து சென்று வரலாம் என கிளம்பி நடக்க ஆரம்பித்தவுடன், கொஞ்தூரம் சென்றவுடன் ஒரு வீட்டிற்குள்ளிருந்து, டேய் முத்தூ, வாடா இங்கே, என்ற கூவலைக்கேட்டு அதிர்ந்து நின்றவன், அதிர்ந்தும்போனான். அவர்கள் கூப்பிட்டது அவர்கள் வீட்டு நாயை எனத்தெரிந்ததும் மனதிற்கு ஒருமாதிரியாக இருந்தது. முத்தாவது, மாணிக்கமாவது, எனக்கு யார் பெயர் வைத்தார்கள் என்று மனதுக்குள் அங்கலாய்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன் , சுமார் ஒரு மணி நேரம் பார்க்கில் போட்டிருந்த கருங்கல் பெஞ்சியில், கருங்கல் மாதிரியே . எங்கு உட்கார்ந்திருந்தாலும் எனக்கு பெயர்வைத்தவர் யாரென்று தெரியப்போவதில்லை.
Leave A Comment