காலங்கள் மாறி வருகின்றன, அதற்கேற்றாற்போல் பழிவாங்க காட்சிகளும் மாறி, மாறி விடுகின்றன. கணவன் மனைவியை அடித்து துரத்திய காலம் மாறி , இன்றைக்கு ஆண்களை அடிமையாக வைத்துக்கொண்டு கொடுமை படுத்துவது போல் உருவாகியுள்ளது . காலம் மாறிவிடும் என்பது உண்மையே. ஆனால் இப்படியும் தலை கீழாக மாறவேண்டாம். ஆனால் பழங்காலத்திலும் இப்படிப்பட்ட நிலைமை இருந்திருக்கலாம். நம் பெரியவர்கள், தங்களைப்பற்றி மறைத்து பேசியிருக்கலாமென தோன்றுகிறது. ஆனால் பெண்மணிகள் அடம், பிடிவாதம் பிடித்து நடக்க ஆரம்பித்துவிட்டால் ஆண்களால் எதுவுமே செய்யமுடியாது என்பது திட்டவட்டமான உண்மைதான், என்றைக்கும்.
பெண்மணிகளும் ஆண்களுக்கு நிகராக எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு குடும்பத்தையும், கார்யாலய வேலைகளிலும் தங்கள் திறமைகளை ஆழமாக காண்பித்து முன்னுக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. பெண்மணி வேலை பார்த்து சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், ஆண்சிங்கம் அடங்கி விடுகிறது. கொஞ்ச காலத்தில் மனம், உடல் எல்லாம் மெது, மெதுவாக அடங்கியும் விடுகின்றன, தன் தோல்வியை ஒத்துக்கொள்வது போல. எல்லாவற்றிற்கும் பழக்கம்தான் தேவை. அதற்குரிய நேரமும் கிடைத்துவிட்டால் ஆண்டவனின் வரப்பிரசாதம் போலவேதான்.
மனிதர்களுக்கு தங்களிடம் என்ன குறையுள்ளது என்பதை புரிந்து கொள்ள தனி திறமை வேண்டும். தன் திறமைகளை புரிந்துகொண்டு செயல்பட ஆரம்பித்து விட்டோமானால் எந்தநேரத்திலும் தன்னை காப்பாற்றிக்கொண்டு விடலாம். பிறர் குறைகளை நாம் கண்ணுக்கெதிரில் காண்கிறோம் , புரிந்து கொள்கிறோம், நம் குறைகள் நமக்குள் இருக்கிறபடியால் நமக்கு தெரிவதில்லை. பிறர்கூறி கேட்டால், நம் அகம்பாவம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. இப்படியாக பல தீர்க்க முடியாத பிரச்னைகளை வாழ்நாளில் கேட்டு, பார்த்து அனுபவித்து வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. ‘சொல்லிக்கொடுத்த சொல்லும், கட்டிக்கொடுத்த சோறும் எத்தனை காலத்திற்கு வரும் என்ற பழமொழிக்கேற்றாற் போல், நேரத்திற்கு தகுந்தாற்போல் போல் நடக்கவேண்டுமென்பது எத்தனை உண்மை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
Leave A Comment