உலகில் கவலைகளுக்கு பஞ்சமில்லை. அவசியம், அநாவசியம் என பார்க்கும்போது , வீட்டை விட்டு வெளியில் போனவர்கள் வீட்டிற்கு வந்து சேரவேண்டும் என வீட்டிலுள்ளோருக்கு கவலை, ஒருபுறமிருக்க, வேலைக்கு போய்திரும்பியவர்களுக்கு வீட்டிற்கு வந்தவுடன், இன்று குடிதண்ணீர் வந்ததா, வேலையாட்கள் வந்தார்களா, பள்ளியிலிருந்து வந்த பிள்ளைகள் வீட்டுவேலைகளை முடித்தார்களா, மேலும் பிள்ளைகளுக்கு அடுத்த டெஸ்ட்க்கு என்ன படிக்கவேண்டும் இப்படி சரமாரியாக வேலை,வேலை எனமனதில் ஊற்றெடுத்துக்கொண்டேயிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இவைகளை முடிக்குமுன்னரே, சாப்பாட்டிற்கு என்னெவெல்லாம் உள்ளன, புதியதாக என்ன செய்து வைக்கவேண்டும்? இவைகளை யோசித்துக்கொண்டே மறுநாள் காலையில் சமையலுக்கு என்ன தேவை என்பதை மனதுக்குள் நினைத்துக்கொண்டிருக்கும் நேரம், போன் மணி அடித்தவுடன் போனில் பேசுகிறோம். இப்படியாக எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்தே வாழ்கிறோம். ஆனால் வாழ்க்கையில் மனதிருப்தியில்லாது வாழவேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்துவிட்டால் எதை எடுத்துக்கொள்வது எதைவிட்டு விடலாம் என நினைப்பதற்கு கூட நேரமில்லை. ஆகையால் மனித வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்யமான நேரமாகிவிடுகிறது. மேலும் வீட்டை விட்டு வெளியில் அதிகமாக உலாவுதற்கு கூட போகாத முடியாதவர்களின் நிலைமையை நினைத்துப்பார்த்தால் இரக்கமேற்படுவதில் ஆச்சரியமில்லை.
ஆனால் வீட்டைவிட்டு வெளியில் போகிறவர்களுக்கு , நாள் முழுவதும் ஒரு நல்ல மனமாற்றம், இடமாற்றம் இருக்கமென்பதில் சந்தேகமில்லை. யாவருக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. பொதுவாக யாவருமே காலையிலிருந்து மாலை வரை வீட்டிலேயே , வேலை செய்பவர்களுக்கு நான்கு சுவர்களுக்குள் இருப்பதால் மனம் மந்தித்து விடுகிறது என்பது உண்மையே. ஆனால் வெளியில் போய் வேலை செய்து வீட்டிற்கு திரும்ப வரும்போது, வீட்டிலுள்ளவர்களிடம் இதைப்பற்றி , அதைப்பற்றி பேசவேண்டுமென நினைப்பதால் மனம் குதூகலமாக இருக்குமென்பதிலும் சந்தேகமேயில்லை. விஷயம் புதிதாக இருந்தாலே பேசுவதற்கும், கேட்பவர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், பழைய வம்புகள், விபரங்களை, யாவருக்கும் தெரிந்த விபரங்களை உடைந்த டேப்ரிகாடர் போல் பேசினால் பேசும் நேரத்தில் அசுவாரசியம் தட்ட ஆரம்பிக்கும். பேசியவைகளையே திரும்ப, திரும்ப, ரிப்பேரான டேப் ரிகார்டர் போல் பேசினாலும், எவருக்கும் கேட்டுக்கொண்டிருக்கவும் பிடிக்காது, என்பது உண்மையே. கிணற்றுக்குள் தவளை வசித்து வந்தால் அதற்கு வெளி உலகத்தை பற்றி தெரியவாய்ப்பில்லை. இந்த போலி உலகத்தில் உண்மையான எதற்குமே முக்யத்துவம் கிடையாது.
Leave A Comment