இன்றைய இளம்பிஞ்சுகள் நாளைய தலைமுறைகள். கடந்த தலைமுறையில் என்ன செய்து வந்தார்களோ அதையேதான் இந்த தலைமுறையும் செய்து வருகின்றன. இந்த தலைமுறையில் தனிப்பட்டதாக கூற எதுவுமில்லை. வழக்கம்போலவே மக்கள் பணத்திற்காக வேலைசெய்து வருகிறார்கள். அந்த நாட்களின் மிராசுதார்களும் பிள்ளைகளை படிக்கவைத்து வெளிநாடு அனுப்பி செல்வந்தனாக்க நினைத்தார்கள்.ஆனால் மனித நோக்கம் வாழ்க்கையில் செல்வந்தனாக மட்டும் இருந்தால் போதாது. செல்வமிருந்தால் பசிக்காதநேரம் கூட உண்ணலாம், உடலைக்கெடுத்துக்கொள்ள. மனமிருந்தால் உற்றார் உறவினருக்கு உதவிகள் செய்யமுன் வரலாம். மேலும் தனக்காகவும் மனோதைர்யம் கூடுகிறது. ஆனால் வயதாகி கை,கால்கள் நடுங்கி உதவிகள் கிடைக்காமல் வாழவேண்டிய நிலைமை வந்தால் கடினமான நேரமே.ஆகையால் நம் கை, கால்கள், வாய், காது, கண் போன்ற இந்திரியங்கள் நன்கு வேலை செய்து வரும் போது, நாம் நமக்கென மற்றும் பிறருக்காகவும் என்னவெல்லாம் செய்துவிட ஆசைபடுகிறோமோ அவைகளை செய்து முடிக்க வேண்டும். காலம் காத்திராது, நமக்காக, கடமைகள் காத்திராது நமக்காக. ஆகையால் நம்கடமைகளை பக்தி சிரத்தையுடன் செய்துவிடவேண்டும். பெரியவர்கள் நம்மிடம் எதையாவது தவறாக பேசினால் கூட உடனே பதில் கூற அவசியமில்லை.
உலகம் தலைகீழாக மாறினாலும், நாம்தான் விரலுக்கு தகுந்த வீக்கம் போல வளர்த்திடவேண்டும். கவலையற்ற வாழ்வு என்பது அரிது. மனக்கவலை பணக்கவலை என்பது நாளடைவில் சரியாகி விடலாம். ஆனால் பெற்ற பிள்ளைகள் குணக்குறைவாக இருந்தால் எப்படியோ சமாளித்து விடலாம். ஆனால் புத்தி வளர்ச்சி சரியில்லாத பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட வேண்டிவந்தால், அதைப்போன்றகடினமான நேரம் தாங்கவொண்ணாதது. இன்றையநாளில் ஒரு சம்பளத்தை வைத்துக்கொண்டு காலம் தள்ளுவது கடினமே. இந்த உலக வாழ்க்கையில் அக்கரைக்கு இக்கரை பச்சை எனதோன்றினாலும் நல்லதும் கெட்டதும் கலந்தே உள்ளன, என்பதைஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம்தான்.
Leave A Comment