இந்த வாழ்வு ஒன்றுதான் நமக்கு தெரிந்து வாழ்ந்து வருகிறோம். ஆனால் அதிலும் எத்தனை இடைஞ்சல்களை எதிர்கொண்டும், தவிர்க்க முடியாதவர்களையும் நம்முடன் சேர்த்துக்கோர்த்துக்கொண்டு வாழ்ந்தே ஆகவேண்டுமென்ற வீம்புடன் வாழத்துணிந்து வாழ்க்கையை நடத்திவருகிறோம். எத்தகைய ஏமாற்றங்களையும் சகித்துக்கொண்டு, அஹ,அஹவென்று அசட்டுசிரிப்பை உதிர்த்துக்கொண்டு காலத்தை வென்று விட்டாற் போன்ற தோற்றத்தை கொண்டுவரப்பார்க்கிறோம். ஆனால் நம்மால் எதையுமே வென்று விட முடியாது என்பதை உணர்ந்தும் தலையை தூக்கி பார்க்க நினைத்து தோற்றுப்போகிறோம். கவலையற்ற வாழ்வு கிடைக்க வேண்டுமானால் இந்த நாட்களில் கடினமே.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ‘ என புத்தகங்களில் படித்திருக்கிறோம். அனுபவத்தில் கடைபிடிக்கும் நேரம்தான் எதுவுமே தெள்ளத்தெளிவாக உண்மை புரிய வருகிறது. நோயற்ற வாழ்வு என்பது யாவருக்கும் கிடைக்காது. ஊர் பூராவும் ஏதோஒரு தொத்து வியாதியில் தவிக்கும் நேரம் நம் மனதும் கவலையில் மறுகும். என்ன செய்ய முடியும்? காலத்தை, நேரத்தை அளவிடுபவர் எவர்? வாழ்க்கை என்றாலே எதையுமே நேர்கொண்டு சமாளிக்க தெரியவேண்டும் என்ற கட்டாயம் உருவாகி விடுகிறது.
ஆனால் நாம் எத்தனை கெட்டிக்காரத்தனமாக இருந்தாலும், நமக்கு எது நடக்கவிருக்கிறதோ, அது நடந்தே தீருகிறது. ஊர் முழுக்க தொத்து வியாதியில் தவிக்கும் நேரம் நாம் மட்டும் நிம்மதியாக உட்கார்ந்திருக்கமுடியாது. இதை ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுத்துத்தான் வரவேண்டியதென்பதில்லை. அவரவர் விதிப்படி நடப்பது நடந்தே தீரும். எத்தனையோ ஆட்கள் அவரவர் மனம் போனபோக்கில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த கால பிள்ளைகளுக்கு பெரியவர்கள் கூறுவது எதுவுமே ஒத்து வருவதில்லை. பெரியவர்களுக்கும் இருக்கும் கவலைகளை கூறிக்கொள்ள வழிதெரியாது மனதில் மறுகி தவிக்கிறார்கள். ஒரு சிலர் காலத்தை கடத்தியாக வேண்டுமென்ற மனதுடன் காலத்தை ஓட்டுகிறார்கள்.
Leave A Comment