எங்கள் கமலபெரியம்மா பரலோக கதியடைந்து விட்ட செய்தி கிடைத்ததும் என் மனம் பின்னோக்கி ஓடியது. என்னுடைய சிறிய வயதில் நான் மனமறிந்து உயர்வாக நினைத்து மகிழ்ந்தவர்களில் முதன்மையானவர் எங்கள் கமலபெரியம்மா. எப்போதும் சுத்தத்தை விரும்பியவர் எங்கள் கமல பெரியம்மா. என்னுடைய அப்பாவின் அண்ணன் மனைவி. சுத்தமாக இருப்பதற்கு ஒரு உதாரணமாக திகழ்ந்தவர் எங்கள் கமலபெரியம்மாதான். எப்போதும் பளிச்சென்று இருப்பார்.எந்த நேரத்திலும், சுத்தத்தை விரும்பியவர் கமலபெரியம்மா. நான் என்பெரியப்பா வீட்டில் படிக்கப்போய் தங்கியிருந்த காலம் பொன்னான காலம் என்றுதான் கூறிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எத்தனையோ ஆட்களை சந்திக்கிறோம், அவர்களுடன் வாழ்கிறோம், ஆனால் நல்ல நேரத்தில் நாம் இருந்தோம் என்பது கனவாகிவிடும்.ஆனால் கமலபெரியம்மாவைப்போல சுத்தத்தை கடைபிடிப்பவர்களை நம் வாழ்க்கையில் சந்திப்பதே அரிது என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். இருசகோதர, சகோதரிகளுடன், வளர்ந்தவர் கமலபெரியம்மா.. அவருக்கு நான்கு பிள்ளைகளுடன், ஒரேயொரு பெண் பிள்ளையும் பிறந்திருக்கிறார்கள். யாவரும் சின்ன, சின்னகுறைகளுடன் வாழ்ந்தும், மறைந்தும் விட்டார்கள். கமல பெரியம்மா யாருடனும் ஒரே மாதிரிபோல் பழகமாட்டார்கள். தலையேபோனானலும் சரி எங்கள் கமல பெரியம்மா சுத்தத்தை கடைபிடித்து கவலையற்று வாழ்ந்து மறைந்துவிட்டார். என்னால் மறக்கவே முடியாமல் வாழ்ந்து மறைந்துவிட்டார்.
Leave A Comment