குளிர்காலம் என்பது ஒவ்வொரு வருடமும் வந்து போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் வருடாவருடம் அந்த நேரத்தை எதிர்பார்த்து பெட்டிக்குள்ளே வைத்திருக்கும் எத்தனையோ கம்பளிசட்டைகளை எடுத்து வெளியில்,வெய்யிலில் போட்டு, எடுத்து எந்தெந்த சட்டைகள் எவருக்கு உபயோகப்படலாம் எனநினைத்துப்பார்த்து, அவரவர்க்கு பகிர்ந்து கொடுப்பது வீட்டிலிருக்கும் அம்மாவின் பல கடினமான வேலைகளில் ஒன்றுதான் என்பதில் சந்தேகமேயில்லை.ஒருவருடையதை தவறிப்போய் இன்னொருவரிடம் கொடுத்துவிட்டோமானால், விலையுயர்ந்தரத்தினங்களை கொடுத்து விட்டாற்போன்ற கலகமேற்பட்டு வீட்டில் அமர்க்களம் ஆகிவிடும்.
ஆண்களுக்கு அத்தனை ஆசையிருக்காது தன்னுடைய பழைய துணிமணிகளிடம், தன்னுடைய பழைய,உபயோகித்த பாத்திரங்களுடன் ஒரு அன்பு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு விடுவதால் பெண்பிள்ளைகளுக்கு இருக்குமோ என்னவோ,எத்தனை காலம் மாறிவிட்டாலும், பிள்ளைகள் சுபாவம் மாறுவதேயில்லை.அதுவும் ஒரு சில பிள்ளைகள் தன்னுடையது என்பவைகளை பிறருடன் பகிர்ந்துகொள்ள முன்வருவதே கிடையாது. ஆண்பிள்ளைகளைவிட பெண்பிள்ளைகளுக்கு தன்னுடைய பழைய உடைமைகளிடம் கொள்ளை ஆசைகள் இருக்கும்.அவர்களுக்காகவே வேண்டாமென்று தோன்றினாலொழிய பிறருக்கு கொடுப்பதற்கு முன் வரவே மாட்டார்கள். பெரியவர்களின் பேச்சுக்களில் எத்தனை உண்மை பொதிந்திருக்கிறது என்பதை அனுபவிக்கும் போது மட்டுமே புரியவரும்.
ஆண்களுக்கு பணத்திலும்,சொத்திலும் உள்ள ஆசைகள், துணிமணிகளிடம், சாமான்களிடமும் இருப்பதில்லை. ஆனதால் பிறருக்கு விட்டுக்கொடுக்க தயங்குவதில்லை. ஆனால் பெண்மணிகளுக்கோ, தன்னிடமில்லாவிட்டால் வேறுஎவரிமும் இருக்கக்கூடாதுஎன்ற எண்ணம் வந்து விடுகிறது. தினந்தோறும் கையாள்வதால் இந்த பிணைப்பு, தன்னுடைய சாமான்களுடன் ஆசைகள் வந்து விடுகிறது என்றே நான் கருதுகிறேன். இந்த வருடம் இன்ன கலர்,கம்பளிசட்டைவாங்கியது என்பதெல்லாம் பிள்ளைகளுக்கு ஞாபகமில்லாவிட்டாலும், பெற்றவளுக்கு துணிகளை பார்த்தவுடன் ஞாபகத்தில் வந்துவிடும். தனக்கு சிறியதாகி விட்டாலும் நினைவிற்காக வைத்துக்கொள்கிறேன் என கெஞ்சி கூத்தாடி வைத்திருப்பார்கள். பிறருக்கு கொடுத்துவிட மனம் வருவது கிடையாது.
தனக்கு உபயோகமேயிருக்காது என்றால் மட்டுமே பிறருக்கு கொடுக்க முன் வருவார்கள்.
Leave A Comment