நம்வாழ்நாளில் எதுகிடைக்கும் என எதிர்பார்த்து நாம் வாழ்க்கையை தொடங்கினோம். நம்மில் பலருக்கு நமக்கு என்ன தேவை என்பதையே கூறிக்கொள்ளமுடியாது. ஏனென்றால் வெளியில் கூறிக்கொண்டோமானால் அனாவசிய சர்ச்சைக்கு நடுவில் மாட்டிக்கொள்வோம். எது கிடைத்தாலும் அவரவர் விதிக்கேற்றாற்போல், மற்றும் திறமைக்கேற்றபடியும் வாழ்க்கை அமையும். திறமையிருந்தால் மட்டும் போதாது, நேரம் காலமும் கை கொடுத்து உதவ வேண்டும். நம்மில் பலருக்கு தனக்கு எது வேண்டுமென்பதே தெரியாது. ஆனால் பல பிற மனிதர்களை காணும் நேரங்களில் மின்னல் மாதிரி பளிச்சென்று ஐடியா புலப்படும். மற்றும் பலர் கனவு காண்பார்கள். இந்த கனவு காண்பது யாவருக்கும் பலிக்காது. கனவு நனவானால் பெருமையாக பீற்றிக்கொள்ளலாம். ஆனால் எப்போதும் ஒரேமாதிரி வாழ்க்கையிருந்தாலும் ருசியில்லாது போய்விடும்.
வீட்டில் பெரியவர்கள் நம்முடன் வாழ்ந்து வந்தால் எல்லாவித கஷ்டநஷ்டங்களுக்கும், ஈடு கொடுத்து வாழ்ந்தவர்கள் பலருடைய கடினமானநேரங்களை கண்டிருந்தவர்களாக இருந்தால் எந்தவிதமான கடின நேரங்களுக்கும் நமக்கு ஆறுதல் கூறி நம் கவலைகளை குறைக்க முயல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பெரியவர்கள் அவரவர் சுபாவப்படியே குறைகளைக்கூறிக்கொண்டு, தன் பிள்ளைகளை உறவுக்கார பிள்ளைகளுடன், ஒப்பிட்டு மனமுடைய செய்வதில்லை. ஏனென்றால் உறவுகளைவிட சிநேகங்கள் பக்கபலமாக உள்ளார்கள். இந்த பரந்த உலகத்தில் கண்களை சுழற்றி நாலாபக்கமும் பக்கமும் கவனித்து தன்னை ஒப்பிட்டுப்பார்க்காமல் பொதுவாக கணித்து பார்ப்பதில் நம்பிள்ளைகளும் தேர்ந்தவர்களாகிவிட்டார்கள். தனக்கு என்ன கோர்ஸ் படிக்கலாமென்பதை பிள்ளைகளே நிர்ணயித்து விடுவதால் பெற்றவர்களுக்கு பொறுப்பு குறைந்து விடுகிறது. நீரில் விழுந்தால் மட்டுமே நீச்சலடிக்க முடியும் என்பது எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பதும் புரியவரும்.
.
Leave A Comment