கொரானா என்றாலே எவருடையதோ பெயர் போல தோன்றுகிறது, ஆனாலும் நமக்கு நன்றாக தெரியுமாதலால், அது ஒருவித வியாதியின் பெயர் என புரிந்து விடுகிறது. எங்கிருந்து வந்தாலும், நம்மிடம் வந்துவிட்டபடியால், நாமும் கொரானாவை அதிஜாக்கிரதையாக கையாண்டு கவனமாக கவனித்து நம்மை , கவனித்துக்கொண்டு வந்ததை தள்ளிவிடவேண்டிய கட்டாயமும் வந்துள்ளது. வேறு தேசங்களில் வந்திருந்தால், நாம் அதைப்பற்றி முடிந்தவரை அலசி பேசி லெக்சர் அடிக்கலாம். நம் இருப்பிடம்தான் அதன் மூலாதாரம் என்பதால் நாம் அதைப்பற்றி விமர்சிக்கவும் விரும்பவில்லை. வந்தவற்றை கையாளவும் பிடிக்கவில்லை, ஒருபக்கம் பீதி, மறுபக்கம் நம்மால் எந்த வியாதியையும் கட்டுக்குள் அடக்கிவிடலாமென்ற கர்வமும் உள்ளன. ஆனால் உயிர் நஷ்டம் தேசவாசிகளின் மனதை உடைத்து விடப்போகிறதே என்கின்ற கவலையும் அதிகமாகிறது. இந்திய சர்க்காரும் முடிந்த அளவு அதிஜாக்கிரதையாக கையாண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது. தேசவாசிகளும் ஒத்துழைத்து கொரானாவை விரட்டியடித்து வெளியேற்றவேண்டும். தேசவாசிகள் ஒன்று கூடி சேர்ந்து துரத்தியே ஆகவேண்டுமென நினைத்து ஒற்றுமையாக ஈடுபட்டால் முடியாத வேலையேகிடையாது.
Leave A Comment