உலகில் புதிய, புதிய வியாதிகள் உருவாகிக்கொண்டே வருகின்றன. ஒருவியாதி வந்துபோய் ஒரிரு மாதங்களுக்குள்  வேறு வியாதிகள் உருவாகி விடுகின்றன. இத்தனைக்கும் இந்தக்காலத்தில் எல்லாவற்றையுமே சுத்தமாக வைத்திருக்க பாடுபடுகிறோம். பிள்ளைகளுக்குக்கூட கைகளை கழுவிக்கொண்டு உணவை உட்கொள்ளவேண்டுமென்பது தெரிகிறது. பிறரிடமிருந்து எதையும் வாங்கிஉண்ணக்கூடாது என்றும் புரிகிறது. அதை கடைபிடிப்பதிலும்  தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  சுத்தமாக இருப்பதற்கு  சுற்று முற்றங்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கும் தயங்குவதில்லை. ஆனாலும் வருடாவருடம், மாறி,மாறி ஏதேனும் ஒரு புதிய நோய் உருவெடுத்து வருகிறது. வைத்தியர்களிடம்  போனால் ,  இந்த வியாதிக்கு மருந்து எதுவும் தேவையில்லை, ரெஸ்ட்டில்  இருந்தால் சரியாகிவிடும் என்கிறார்கள். நாம் படும் பாடு நமக்குமட்டுமே தெரியும்.

இந்தகொரானாவிற்கும் அதே போலவேதான் உள்ளது. விட்டு,விட்டு ஜூரம் வரும்     உணவு உண்ணப்பிடிப்பதில்லை. சுரம் வந்த ஓரிரு நாட்களிலேயே உடம்பு ஓய்ந்து விடுகிறது. தளர்ந்தும் விடுகிறது. வைத்தியரிடம் போனால். மருந்து கொடுத்து குணப்படுத்திவிடுகிறார். ஆனாலும் டாக்டரிடம் போய்வர , மூன்று மணிநேரமாவது செலவழித்தே ஆகவேண்டும். அந்த சுரத்தின் வேகம் இறங்கி நார்மலுக்கு வருவதற்கு குறைந்த பட்சம் பத்து நாட்களாவது தேவைப்படுகிறது.  சிறிய பிள்ளைகளாக இருந்தால் உடல் அசதி தீருவதற்கு, இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கு  ஒரு மாதம் தேவை.  இப்படியாக வருடாவருடம் பண்டிகைகளை கொண்டாடுவது போல புது, புது வியாதிகளை    கவனமாக    கொண்டாடி காப்பாற்ற வேண்டியிருக்கிறது.