எங்கள் பாட்டியம்மா எங்களுக்கு ஒரு அறிவுகளஞ்சியம் மாதிரி வாழ்ந்திருந்தாள். ஆங்கிலேயர் நம்தேசத்தை ஆண்டு வந்த நாட்களைப்பற்றி பேசினாரானால் கேட்ட மனம் வியந்துவிடும். அவர்கள் ஐந்து சகோதரிகள், சகோதரனில்லாத காரணத்தால் அவர்களின் பெரிய சகோதரியின்  பிள்ளையை சுவீகாரம் எடுத்துக்கொண்டு  சந்தோஷமாக வாழ்ந்துவந்தார்கள். அந்த மாதிரி ஒற்றுமையையும் அன்பு செலுத்துபவர்களையும் இன்றைக்கு காண்பது அரிது. எங்கள் பாட்டியம்மா ஆங்கிலேயர்களின் ஆட்சியைபற்றி உயர்வாக பேசிக்கொண்டிருப்பார். அவர்கள்  பள்ளிக்கூடம் போய் படிக்கவில்லை. ஆனாலும் தினமணி, சுதேசமித்திரன் போன்ற தமிழ் பேப்பர்களை   படிப்பதும் அரசியலைப்பற்றி அலசுவதிலும் வல்லவராகவே வாழ்ந்தார். பாட்டியம்மாவின் குடும்பம் ஒரு உயர்வான குடும்பமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

அந்த சகோதரிகள் வீடுகளில் எந்த விசேஷம் நடந்தாலும் அந்த சகோதரிகள் ஒன்று கூடி  ஒருவருக்கொருவர் அபிப்ராயங்களை பகிர்ந்துகொண்டு, அந்த விசேஷத்தை உயர்வாக நடத்திக்கொடுத்து விட்டு எங்களை போன்ற பேரக்குழந்தைகளையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு போய் குடும்பமென்றால் இப்படித்தான் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காது, அவரவர்க்கு முடிந்தவைகளை செய்து எந்த விசேஷத்தையும், நன்றாக செய்து முடித்துக்கொண்டு பிரியும் நேரத்தில். மறுபடியும் எப்போது , எங்கள் சந்திப்போம் என்பதையும் பிளான் செய்துகொள்வதையும் கண்டிருக்கிறேன். அந்த மாதிரி எவரிடமிருந்தும் எதையுமே எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்தவைகளை செய்துவிட்டு  சகோதர, சகோதரிகளை விட்டு பிரியும் நேரம் உண்மையாகவே கண்கலங்கி பிரிந்து வரும்போது, அடுத்த சந்திப்பு எங்கே என்பதையும் கூறிக்கொண்டு கிளம்புவதையும் இன்று நினைத்தாலும், ஐம்பது வருடங்கள்  முன்பாக நடந்தவைகள் நேற்று நடந்தாற் போல் கண்முன் வருகிறது.

எந்த குடும்பத்திலும் பணம், காசு என்பது கிடைத்து விடக்கூடும் . ஆனால் நல்ல மனிதர்கள் கிடைப்பது அபூர்வமே.எங்கள்குடும்பம் ஒரு உயர்வான. குடும்பமே என்பதில் சந்தேகமேயில்லை  எங்கள்   சகோதர,சகோதரிகள் பிள்ளைகளும் எங்கங்கோயா  வாழ்ந்து வந்தாலும் ஒருக்கொருவரைப்பற்றி விசாரித்து கொண்டுவாழ்ந்து கொண்டும், நேரில் சந்திக்கும்  நேரத்தில் அவரவர்செய்த குறும்புகளை கூறிக்கொண்டு ஜாலியாக பேசுவதைபார்த்தால் மனம் நிறைவடைகிறதுஎன்பதில் சந்தேகமேயில்லை. குடும்பம் என்பது கூட்டத்திற்காக மட்டுமல்ல, நம்சுக துக்கத்தை பகிர்ந்து கொள்ளவும் நம் ரத்த பந்தம் மிகவும் அவசியம். சில தவறுகள் நடந்திருந்தாலும் மன்னித்து,  வாழு முயற்ச்சியுங்கள்.