உலகம் உருண்டையாக உள்ளது என்பதற்கு, நிறைய உதாரணங்களை காட்டுகிறார்கள்,  ஆனால் காலத்தின்  அவலங்களை  காண்பித்து  தாங்காது.  எவருக்குமே, எந்த பொறுப்பையும் எடுத்துக்கொண்டு எதிர் கொள்ளும் மனம் வருவதில்லை.  எதையுமே அப்படியே விட்டு விடவேண்டும் தனக்குத்தானே சரிசெய்து கொள்ள முடிகிறாற் போல்  ஒருகாலகட்டம் வந்து விடவேண்டும் என்பது போல் நினைத்து காலத்தை ஓட்டுகிறார்கள். இந்தக்கால விவசாயிகளுக்கு வயல்களில் வேலை செய்து விட டிராக்டர்கள் உள்ளன. மனிதர்களுக்கு வீட்டில் சமையல், சாப்பாட்டை கவனிக்க வேலையாட்கள் உள்ளார்கள்.  பிள்ளைகளை கவனிக்க ஆயாக்கள் உள்ளார்கள்.

மனிதர்கள் எப்பேர்ப்பட்டவர்களுடனும் ஒத்துப்போக தயாராக உள்ளார்கள், ஆனால் தன் பந்தங்களை தவிர்க்கப்பார்க்கிறார்கள்.  பிறரை  குற்றம் குறைகள் கூறாத மனிதர்கள்  கிடைக்கமாட்டார்கள்.  நம்மனிதர்கள் தன் பிள்ளைகளுக்கு நஷ்டத்தை அளித்து மனமகிழ்ச்சிஅடைய மாட்டார்கள், என்பதை நம்புவதற்கு தயாராக இல்லை. மற்றவர்கள் நம் குடும்பத்தை பற்றி வம்புகள் கூறக்கூடாது, மேலும் நம்பிள்ளைகளை நாம் வளர்த்தால்தான் நம்மில் இருக்கும் சில சற்குணங்கள் அவர்களுக்கு தொற்றிக்கொள்ளலாம்.

மனித உள்ளத்திற்கு அன்பு என்பதை அனுபவித்தால் மட்டுமே அதன்   மகிமை தெரியும்.  நாம் நம்மிடம் சமையல் செய்பவராக இருந்தாலும் சரி, நம்வீட்டை சுத்தப்படுத்த வருபவர்களாக இருந்தாலும் சரி, அவரவர் கடமைகளை சரிவர செய்து வரும்போது மட்டுமே அவர்களுக்கும் திருப்தி. சதா சர்வகாலமும் குற்றங்களையே கூறிக்கொண்டிருந்தால்  எந்த உயிருக்குமே அலுப்பு ஏற்பட்டு விடும். சின்ன, சின்ன  குற்றங்களை கண்டும் காணாதவாறு இருப்பது நலத்தையே அளிக்கும். எந்த உயிருமே பாராட்டுக்களை விரும்புவது என்பது சகஜமே. பாராட்டுக்கு மயங்காத ஜீவனே கிடையாது. ஆனால் நம் மனிதர்களை நாம் பாராட்டுவது என்பது குறைவாகவே உள்ளது.  ஏனெனில் அவர்கள் நம்மை விட்டு கிளம்ப முடியாது என்ற தைர்யம்தான் காரணம்.

ஏனெனில் நம்மிடம் கை நீட்டி பணம் வாங்குபவர்களுக்கு உள்ள அதிகாரம்  நம்முடன் நமக்காகவே வாழ்பவர்களுக்கு நாம்கொடுப்பதில்லை.  காசுக்காக வேலை செய்பவர்களுக்கு வெவ்வேறு  இடங்களில் வேலை கிடைத்து சென்று விடக்கூடும் என்ற பயத்தினால் அவர்களை மகிழ்வாக  வைத்திருக்க பாடுபடுகிறோம் . ஆனால் நமக்காகவே வாழ்பவர்கள் எங்கும் கிளம்ப மாட்டார்கள் என்ற தைர்யத்தினால் அவர்களை சில்லறை காசுகளைப் போல் நினைத்து  உபயோகித்துக்கொள்கிறோம். பிறமனிதர்கள் கூறும் புத்திமதிகளை கூர்மையாக உணர்ந்து கொண்டாற்போல் பேசுகிறார்கள். தன் வீட்டுப்பெரியவர்கள் கூறியவைகளை பற்றி கிண்டலடிப்பார்கள். எத்தனை  புத்திசாலியாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் எவருமே தடுமாறுகிறார்கள், என்பதை புரிந்து கொண்டு வாழவேண்டும்.அதுவும் கணவன், மனைவி என்பது ஒரு உன்னதமான உறவு. அதை காப்பாற்றி வைத்துக்கொள்ள அகடவிகட சாமர்த்தியங்கள் தேவையில்லை.   உண்மையான    பரிபூர்ண அன்புடன் பழகிக்கொண்டு  மற்றவர்களையும் கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. பிறரிடம் குற்றங்களையே கண்டுகொண்டு விமர்சிக்காமல் இருப்பதே நலம் தரும் என்பதை புரிந்துகொண்டு வாழ்க்கையை நடத்திக்காண்பிக்கவேண்டும்.