‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’ என்று ஒரு பழமொழி உள்ளது. ஆனால் அதை முழுமையாக அனுபவித்தவர்கள் இன்று உயிருடன்இருக்கிறார்களா என தேடினால் எவரும் கிடைக்க மாட்டார்கள் என்பதே நிச்சயம். ஏனென்றால் வருடாவருடம் புது, புதுவியாதிகள் உருவாகிக்கொண்டு போகிறது. மேலும் இன்றைய தேதியில், Bp,Sugar வியாதி இல்லாதவர்களே கிடையாது. மேலும் எனக்கு எந்த வியாதியுமில்லை என சொல்வோமானால் நம்மை அவர்கள் ஒருமாதிரியாக பார்ப்பார்கள் , இவன் கதை விடுகிறானா இல்லை உண்மையாக இருக்குமா என்று?
நாம் சராசரிமனிதர்களிடமிருந்து தப்பித்தும் வாழவேண்டும். அதே நேரத்தில் அவர்களையும் உதாசீனம் செய்யாமல் பழக முயற்சி செய்யவேண்டும். உலக ஜனத்தொகை கூடிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் யாவருக்கும் சிறிய பிள்ளைகள் என்றால் விளையாடவேண்டும், கொஞ்சவேண்டும் போலும் தோன்றுகிறது. பிள்ளைகள் இல்லாதவீடு சாமான்களேயில்லாத காலி வீடு மாதிரி உள்ளது. ஆனால் அப்படியே வாழ்ந்தவர்களுக்கு அதுதான் நிம்மதியாக இருக்கும். காச், மூச்சென்று பிள்ளைகள் சத்தம் கேட்டுப்பழகியவர்களுக்கு அந்த சண்டை சச்சரவுகள் காதில் விழாவிட்டால் சத்தம் கேட்காது இருப்பது மனோவேதனை கூட கொடுக்கும்.
Leave A Comment