இந்த பரந்த உலகில் பிரமாதமாக வாழ்ந்தோருக்கும் குறைவில்லை, திண்டாடி தவித்தோருக்கும் கணக்கில்லை. அவரவர் தலைவிதியை நிர்ணயனித்தவனுக்கு கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படியாக வாழ்நாட்களை அவரவர் சந்தித்து காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. உமாவின் வாழ்க்கையும் அதேபோலவேதான் ஒரே சீரான கதியில் ஓடவில்லை. இவ்வுலகில் நமக்கு ஒரு கடினமான நேரமென்றால் மற்றவர்களுக்கு பலவிதமான கடினமான நேரத்தை அள்ளிக்கொடுத்து வேடிக்கை காண்பிக்கிறான். எவரையும் குற்றம் கூறுவதால் நம் பிரச்னைகள் தீருவதற்கும் வழியில்லை. எத்தனை பிரச்னைகளாக இருந்தாலும் சமாளிக்கும்போதுதான் தெரியவரும் எவ்வாறு சமாளிக்கவேண்டுமென்பது. இளம் வயதில் எத்தனைக்கெத்தனை பிரச்னைகளை சந்திக்கிறோமோ அத்தனை நல்லது.
இளம் கன்று பயமறியாது என பெரியவர்கள் கூறுவார்கள். அது உண்மையான வாக்குகள்தான். இளவயதில் எதையும் சவாலாக எடுத்துக்கொள்வதால் திறமையும் உண்டாகிறது. வயதாகிவிட்டால் மனம் உடைந்து விடுகிறது என்பது உண்மையே . படிப்பவர்களுக்கும் இதேபோல்தான். படிப்பு என்பது அத்யாவசியமானது. எதையும் சவாலாக எடுத்துக்கொண்டு துணிவுடன் சமாளிக்கப்பார்க்கிறோம் . எதுவுமே காலம்கடந்து விட்டால் உப்புசப்பென்று போய்விடுவது உண்மையே. பிள்ளை வளர்ப்பு என்பது என்பது ஒரு தனியான கலையே. நாம் வளர்த்துவிட்டோம் என கூறினால் எதை காண்பித்து வளர்த்தோம், அதிலிருந்துஅவர்கள் கற்றுக்கொண்டது என்னவாக இருக்கும்? காலம்தான் பதிலளிக்க வேண்டும். நம் மால்வாழ்க்கை நடைமுறைகளை கண்டு எவரையும் நம்மால் எடை போட்டு கணிக்க முடியாது. எதையும் சமாளித்துவிடலாம் எனகணக்குப்போடுவது சுலபமே. ஆனால் நடைமுறையில் சாத்தியமா என்பது வாழ்வின் ஓட்டம்தான் காண்பிக்கவேண்டும்.
Leave A Comment