அனுபவம் என்றால் நிரம்ப பழக்கமுள்ளது என்பதுதான் அர்த்தம்.  அனுபவப்பட்டவர்களுக்கும் , புதிதாக எதையும் செய்ய முற்படுபவர்களுக்கும், நிறைய வித்யாசங்கள் இருக்கும். அவர்கள் நடப்பிலிருந்தும் , செய்யும் செயல்களிலிருந்தும் தெரிந்நுவிடும்.  அனுபவமில்லாத காரோட்டிகளுக்கும், தினந்தோறும் மணிக்கணக்காக  காரோட்டுபவர்களுக்கும்  நிறைய வித்யாசமிருப்பதை அனுபவத்தில் ஊறியவர்கள் புரிந்து கொண்டு விடுவார்கள். எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும், அதை கச்சிதமாக முடிப்பதிலிருந்தும், நமக்கும் ,  நாம் வேலையில் தேர்ந்தவர்களாக இருந்தால்  புரியவரும். இல்லையேல் பிறர் கூறியவற்றை நம்பிக்கொண்டு ஏமாந்து விடுவோம்.

நம் பெரியோர்கள் எனக்கூறுவதற்கும் , பிள்ளைகளை கற்றுக்குட்டிகள் எனக்கூறுவதற்கும் காரணமே அதுதான். அனுபவம் என்பது ஒரு உயர்வான கருத்து. அனுபவப்பட்டவர்கள்,  அதாவது வாழ்நாட்களில் அவர்கள் அனுபவங்களை உணர்ந்து               சிந்தித்து பார்த்து , சிலமனிதர்களுடன்  உரையாடி, எந்தவேலையையுமே ,ஒரு சிலருடன் கலந்துரையாடி, நமக்கு ஒத்துவருமா என யோசித்து செய்வார்கள் , அவசரப்பட்டுக்கொண்டு எந்த முடிவையும் எடுக்கமாட்டார்கள். எவருடனும்  எந்தமாதிரியான பேச்சையும் மனம் போனபோக்கில் யாவரிடமும்  பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் எதையும் தீர ஆலோசித்து தங்களுக்கு வழக்கமாக வந்து உதவிசெய்பவர்களையும் கலந்துஆலோசித்து அவருடைய அபிப்ராயத்தையும் யோசனைகளையும் ,  முடிவெடுத்தோமானால்  நல்லவிதமாகவே முடியும். அது எப்பேர்ப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி.