சிறியவயதில் யாவருக்கும் புதிய சிநேகம் பிடித்துக்கொள்ள இளம் மனதிற்கு ஒரு உற்சாகம் ஏற்படுவது உண்மையே. மஞ்சரி இரவு வேளை தூக்கத்தின் போது ஒரு உற்சாக கனவு கண்டாள் , என் சிநேகிதி. ஒரு ராஜகுமாரன் அரண்மனையில் எவருக்கும் தெரியாமல் என்சிநேகிதி மீராவின் அறையின் கதவை தட்டியவுடன் , மீரா கண்விழித்துப் பார்த்ததும் புரிந்துகொண்டுவிட்டாள், இவன் சாமான்ய ஆளில்லை  நிச்சயமாக ராஜகுமாரனாகத்தான்  இருக்கவேண்டுமென யூகித்துக்கொண்டுவிட்டாள்.

அவளுக்கு உற்சாகம் கரைபுண்டு ஓடுகிறது , இந்தபக்கம் , அந்த பக்கம் கண்களை சுழட்டிபார்க்கிறாள். ஒரு ஜீவன் கூட அவள் கண்ணில் தென்படவில்லை.  நீங்கள் யார்?  நான் இங்கிருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது என கேட்கிறாள்.  நீ இங்குதானிருப்பாய் என நானே யூகித்துக்கொண்டதுதான் என்றதும், அவளுக்கு மகிழ்ச்சி அதிகமாகி கரை புரண்டு ஓடியது.  நான் உன்னை சந்திப்பதற்குத்தான் வந்தேன், எனக்கேட்டதும், அளவிலாஆவலுடன் அவனுடன் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிக்க தயாராகிவிட்டாள்.  இரவா பகலா  எனக்கூட தெரியாமல்  பேச உட்கார்ந்துவிட்டாள்.

தன் இளவயதில் ராஜகுமாரனை சந்திக்கும் ஆவலில் வளர்ந்த கதைபற்றி நீண்ட நேரம்  அவனிடம  பேசியதில் அவனும் மகிழ்வடைந்து உட்கார்ந்து கொண்டு பேசாரம்பித்து  விட்டான். திடீரென எவரோ கதவை  தட்டியவுடன்  குதித்துக்கொண்டு போய் கதவை திற்ந்தால், அங்கு ராஜாவின்     சேவகர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். உண்மையிலேயே அரண்மனையிலிருந்து. சேவகர்கள் வந்திருந்தார்கள். இருவருக்கும் தலைகால் புரியவில்லை, எதற்காக வந்துள்ளார்கள என கேட்கக்கூட தோன்றாமல் வாயடைத்து திணறினார்கள். அவர்களை தங்களுடன் அழைத்துக்கொண்டு அரண்மனையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டதும் புரிய வந்தது, இது  எல்லாமே  கற்பனை என்று.